ஒரு குடும்பத்தின் வரம் குழந்தை. சில தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள்
அவமானம், மன வேதனை அடைகின்றன. குழந்தை இன்மைக்கு உடல் நல பிரச்னையைத் தாண்டி கிரக அமைப்பு முக்கியம். எனவே, குழந்தை இன்மைக்கு ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளது என்பதை பார்கலாம்....
ஒரு வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைவது குழந்தைகள். மேலும் கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளால பிரிய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், பிரியாமல் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ முக்கிய காரணமாக இருப்பது குழந்தைகளே.
தாய்மை அடைவது பெரும்பாளான பெண்களுக்கும், குடும்பங்களிலும் கொண்டாட்டத்தைத் தரக்கூடியது. பெரும்பாலான பெற்றோர் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதிலும், அவர்களை எப்படியெல்லாம் வளர்ப்பது என்பதே நோக்கம். குழந்தை இல்லாமைக்கு மருத்துவம் உடல் நலம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறினாலும், ஜோதிடத்தில் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
குழந்தை இன்மைக்கு ஜோதிடத்தில் கூறப்படும் செய்தி என்னவென்று பார்க்கலாம்.
குழந்தை இல்லாமைக்கு ஜோதிடம் கூறும் காரணங்கள் :
குழந்தை வரம் பெற நம்முடைய ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டியது 5 மற்றும் 9ம் பாவங்கள். திருமணம் இல்லற சுகம், தம்பதிகளின் ஒற்றுமைக்கு சுக்கிரன் காரணமாக இருந்தாலும், புத்திர பாக்கியத்திற்கு முக்கிய காரண கிரகமாக விளங்குவது வியாழன் பகவான்.
மேலும் ஜாதகத்தில் அமைந்திருக்கும். குரு பகவான் பலம் மற்றும் பலவீனங்களை வைத்து குழந்தை பிறப்பு சாத்தியமா? இல்லையா? என்பதை குறிப்பிட முடியாது.
குழந்தை இல்லாத கிரக நிலை ஜோதிடம் பூர்வ புண்ணிய வீடான 5ம் வீட்டு அதிபதி குரு பகவானுக்கும் அசுப கிரகங்களுக்கு இடையில் அமைந்திருந்தால் அல்லது அந்த கிரகம் குருவின் தோஷம் சேர்ந்திருந்தால், அவர்கள் குழந்தை இழப்பை சந்திக்க நேரிடும்.
1, 5 மற்றும் 7 வது வீடுகளின் அதிபதி சுபர்களாக அல்லது பாவகிரகங்களாக அமைந்து மற்றும் குரு சேர்க்கை உருவாகும் போது எதிர்மறையான பலன் கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும். 5ம் வீட்டிலும், 5ம் வீட்டு அதிபதி தோஷத்துடன் பலவீனமாக இருக்கும் நிலை குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உருவாக்கலாம்.
மேலும் விருச்சிகம், கன்னி, ரிஷபம் மற்றும் சிம்மம் மலட்டு ராசிகள் என்று நம்பப்படுகிறது. இந்திய வேத ஜோதிடத்தின் படி சனி 12 ஆம் வீட்டில் அமர்வதால், தனுசு ராசிக்கு 5ம் வீடு பாதிப்பதால், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம் என்று கூறுகிறது. கடக ராசிக்கும் இது போல 12 ஆம் வீட்டில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியத்திற்கான தடை ஏற்படலாம். ஏனெனில் தனுசு, கடக ராசிக்கு 5ம் பாவ அதிபதி செவ்வாயாக அமர்வது தான் இதற்கு காரணம்.
இதையும் படிங்க: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கான நற்செய்தி இதோ..!
கிரக சேர்க்கையால் உருவாகக்கூடிய சில அமைப்பிற்கு யோகம் என்று பெயர். யோகம் என்றால் நன்மை மட்டுமே செய்யும் என நம்புவதை நிறுத்தவும். சில கிரக சேர்க்கை யோகம் பலருக்கு தீமையும் தரும்.