வீட்டுக்கு இனி பெயிண்ட்ஸ் அடிக்க வேண்டாம்..! அப்படியே "லேமினேட் செய்யலாம்"..! 10 வருடம் ஷைனிங்கா மின்னும்...!

By ezhil mozhiFirst Published Jan 28, 2020, 4:17 PM IST
Highlights

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், இந்த சிறப்பு மிக்க பெயிண்ட்ஸ் பயன்படுத்துவதால் கண்டிப்பாக  நமக்கு செலவு மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளலாம். ஏனெனில் இது வீட்டின் வெளிப்புற சுவர்களை கடுமையான வெயில் மற்றும் கணிக்க முடியாத மழையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

உங்கள் வீட்டின் சுவர்களை லேமினேட் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை ஆசியன் பெயிண்ட்ஸ் வழங்குகிறது

பார்த்து பார்த்து கட்டும் நம் வீட்டின் அழகு அதிகப்படியான  சூரிய வெப்பம் மற்றும் மழை  காரணமாக  வீட்டின் சுவர்கள் மிகுந்த பாதிப்படைந்து விடுகின்றன. இது வீட்டின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் கவர்ச்சியையும் சீர்குலைக்கிறது. ஆனால் கற்பனை செய்து பாருங்கள்.... காற்று மழை வெப்பம் என எதன் மூலமும் பாதிக்காதவாறு வெளிப்புற சுவர்களை அழகாகவும் புதியதாகவும் தோற்றமளிக்க வீட்டை லேமினேட் செய்ய முடியும்.

அதாவது வீட்டை பாதுகாக்க "ஆசிய பெயிண்ட்ஸ் அல்டிமா புரோடெக்" மிக அருமையாக வாய்ப்பாக அமைந்து உள்ளது. இது நீடித்து நிற்கும் "லேமினேஷன் தொழில்நுட்பத்தை" அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், இந்த சிறப்பு மிக்க பெயிண்ட்ஸ் பயன்படுத்துவதால் கண்டிப்பாக  நமக்கு செலவு மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளலாம். ஏனெனில் இது வீட்டின் வெளிப்புற சுவர்களை கடுமையான வெயில் மற்றும் கணிக்க முடியாத மழையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

லேமினேஷன் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள "அல்டிமா புரோடெக்" நீடித்த தன்மை கொண்டது மற்றும் சுவரின் அழகிய தோற்றத்தின் அழகை தனித்துவமாக காண்பிக்கும்  திறன் கொண்டது. இதற்காக 10 வருட உத்திரவாதமும் கொடுகுக்கப்படுகிறது. 

இந்த தயாரிப்பின் பிற அம்சங்கள் என்னெவன்றால் சிறந்த தூய்மை, கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் கிராக் பிரிட்ஜிங்( crack bridging) அமைப்பு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அழுக்கு  படியாமல், மற்ற உயிரினங்களின் கழிவுகள் என எதுவும் சுவர் மீது படியாது. எனவே வீட்டை பாதுகாப்பது மட்டுமல்லமல் எப்போதும் மினுமினுப்பாக வைத்துக்கொள்ள முடியும்.  

"ஏசியன் பெயிண்ட்ஸ் அல்டிமா புரோடெக்" எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். காரணம் இதில் எந்த விதமான நச்சுக்களும் இல்லை.மேலும் இது GS-11 தரத்தில் VOC வரம்புகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. அது மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

வானிலை மாற்றம், தட்ப வெட்ப நிலை, கால நிலை மாற்றம் என இதற்கெல்லாம் ஒத்துழைக்காத மற்ற பெயிண்ட்ஸ் பயன்படுத்தி இன்றளவும் வீட்டின் உரிமையாளர்கள் சிரமப்படுகிண்டனர். ஆனால் இதற்கெல்லாம் தற்போது புதியதாக வந்துள்ள அல்டிமா புரோடெக் கொண்டு உங்கள் வீட்டை லேமினேட் செய்யுங்கள்.. பெயிண்ட் அடிக்காதீர்கள்.

click me!