தற்போது கரோனா வைரஸ் பாதித்த முதல் நகரமான ஹுவாங் நகரம் முற்றிலும் முடங்கி உள்ளது. யாரும் மற்ற நகரத்திலிருந்து அங்கு வரவோ அல்லது அந்த நகரத்திலிருந்து மற்ற நகரங்களுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனோ வைரஸ் தாக்கி சீனியர் டாக்டர் பலி..! பதறும் சீனா...! கதறும் மக்கள்...!
சீனாவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸால் இதுவரை 106 பேர் இழந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் லியாங் வுடோங்வும் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வை கிளப்பி உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் பாதித்த முதல் நகரமான ஹுவாங் நகரம் முற்றிலும் முடங்கி உள்ளது. யாரும் மற்ற நகரத்திலிருந்து அங்கு வரவோ அல்லது அந்த நகரத்திலிருந்து மற்ற நகரங்களுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸின்ஹுவா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 62 வயதான அறுவை சிகிச்சை மருத்துவர் லியாங் வுடோங் கரோனா வைரஸ் தாக்கியதில் 9 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது மரணம் அனைவர் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்துறையில் இவருடைய மரணமே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு முதல் இறப்பு என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், தற்போது 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.