வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போன வேலூர்..! ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க வைத்த சுவாரஸ்யம்..!

By ezhil mozhiFirst Published Aug 2, 2019, 4:11 PM IST
Highlights

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றியது திமுக. அதிமுக சார்பாக தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். 

வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போன வேலூர்..! ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க  வைத்த சுவாரஸ்யம்..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக தொடர்ந்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.வடமாநிலங்களில் பாஜகவிற்கு பெரும் ஆதரவு இருந்தாலும், தென்மாநிலங்களை பொறுத்தவரையில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாத ஒரு சூழலே உள்ளது, அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஐந்து இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றியது திமுக. அதிமுக சார்பாக தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். அதேவேளையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருந்தது. காரணம்... பணம் பட்டுவாடா செய்ததாக திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் மீது புகார் எழுந்ததால் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மூன்று மாதம் கழித்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வரும் எட்டாம் தேதி வாக்கு எண்ணப்படும். எனவே திமுக மற்றும் அதிமுக தங்களது ஆதரவாளர்களுடன் வேலூர் தொகுதியில் தெருத்தெருவாய், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

எனவே திமுக மற்றும் அதிமுக சார்பாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது வேலூரில். இதில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால்.. இந்தியா முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்வு தேர்தல் நடைபெற்றது. அதாவது வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளில் தேர்வு தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் வேலூர் தொகுதியின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என காத்திருக்கிறது.

பொதுவாக வேலூர் என்றால் வெயிலுக்கும் ஜெயிலுக்கும் மட்டுமே பிரபலமாக பார்க்கப்பட்ட விஷயத்தைத் தாண்டி, தற்போது வேலூர் தொகுதிக்கு மட்டும் நடத்தப்படும் நாடாளுமன்ற தேர்தலை ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை அனைத்து கட்சி தலைவர், தொண்டர்களை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது...!

click me!