அமெரிக்காவில் பட்டைய கிளப்பும் அம்மா தொண்டர்..! தமிழக அதிமுக தொண்டர்களே வாயடைத்து போன தருணம்..!

Published : Aug 02, 2019, 02:11 PM IST
அமெரிக்காவில் பட்டைய கிளப்பும் அம்மா தொண்டர்..! தமிழக அதிமுக தொண்டர்களே வாயடைத்து போன தருணம்..!

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இல்லை என்றாலும், அவர் பெயர் சொல்லும்படி இன்றளவும் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டும் மனதார நினைத்து சொல்லப்படும் ஒரே ஒரு வார்த்தை "அம்மா உணவகம்".

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இல்லை என்றாலும், அவர் பெயர் சொல்லும்படி இன்றளவும் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டும் மனதார நினைத்து சொல்லப்படும் ஒரே ஒரு வார்த்தை "அம்மா உணவகம்".

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தாலும் அம்மா உணவகம் திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. காரணம் மிக மிக குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கப் பெறுவது. தினந்தோறும் கூலி வேலை செய்து தரமான உணவை சாப்பிடக்கூட முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கெல்லாம் மாபெரும் விஷயமாக அமைந்தது அம்மா உணவகம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களும் அம்மா உணவகத்தில் உணவை அருந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இது தமிழகம் மட்டுமின்றி அம்மா உணவகத்தின் பெருமை அமெரிக்கா வரை சென்றுள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... நம்பித்தான் ஆக வேண்டும்.தினேஷ்  என்ற இளைஞர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு சில ஆண்டுகள் நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். இவர் சிறுவயது முதலே அம்மா மீது கொண்ட அதீத பாசம் கொண்டவர் மற்றும் மிக சிறந்த தொண்டர் என்பதால், தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஒரு டாலருக்கு இரண்டு இட்லி, மூன்று விதமான சட்னி, சுடச்சுட சாம்பார் என கொடுத்து அனைவரையும் அசத்துகிறார்.

அமெரிக்காவில் வாழும் இந்திய வாழ் மக்கள் இந்த ஓட்டலுக்கு படையெடுத்து சென்று ஒரு டாலருக்கு இரண்டு இட்லியை பெற்று மகிழ்ச்சியாக உண்கின்றனர். அமெரிக்க வாழ் தமிழ் மற்றும் இந்திய மக்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்களும் இந்த உணவகத்தில் உணவு அருந்த மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அம்மா பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொண்டு அம்மாவிற்கு இப்படி ஒரு தொண்டரா என வியப்பாக
பார்க்கின்றனர்.

இது தொடர்பான ஒரு வீடியோ இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த அதிமுக தொண்டர்களே அம்மா மீது இப்படி ஒரு பாசம் வைத்த தொண்டரா..?  என ஆச்சரியப்படுகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன்மூலம் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது என்பதற்கு இதைத்தவிர வேறு ஏதாவது சான்று கூற முடியுமா..?  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை