உருவானது புதிய சட்டம்..! கொரோனா அறிகுறியோடு வெளியில் சுற்றி திரிந்தால் "அபராதம்" மற்றும் "ஜெயில்"..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 16, 2020, 05:19 PM IST
உருவானது புதிய சட்டம்..! கொரோனா அறிகுறியோடு வெளியில் சுற்றி  திரிந்தால் "அபராதம்" மற்றும் "ஜெயில்"..!

சுருக்கம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் இல்லாமல் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும்படியும், மற்றவர்களுக்கு பரவுவதற்கு ஏதுவாக வெளியே சுற்றி திரிந்தால்.. ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அதிரடியாக அறிவிப்பை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டு உள்ளனர்.

உருவானது புதிய சட்டம்..! கொரோனா அறிகுறியோடு வெளியில் சுற்றி  திரிந்தால் "அபராதம்" மற்றும் "ஜெயில்"..! 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த ஒரு தருணத்தில் பிரிட்டன் அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் இல்லாமல் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும்படியும், மற்றவர்களுக்கு பரவுவதற்கு ஏதுவாக வெளியே சுற்றி திரிந்தால்.. ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அதிரடியாக அறிவிப்பை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டு உள்ளனர்.

இதற்கான முழு அதிகாரத்தையும் போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா அறிகுறிகளோடு சுற்றி  திரிபவர்களை சிறைக்கு அனுப்பினால் அவர்கள் மூலமாக மற்ற கைதிகளுக்கு பரவாதா? இது எந்த மாதிரியான ஒரு புது சட்டம் என தெரியவில்லை.. என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க 70 வயதிற்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள், தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்