"அம்மா" எந்த சூழலிலும் இதைத்தான் நினைப்பார்..!

 
Published : Jan 29, 2018, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
"அம்மா" எந்த சூழலிலும் இதைத்தான் நினைப்பார்..!

சுருக்கம்

amma will think like this only in this situation

 உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன்  அம்மா தான்.அம்மாவை பிரிந்து இருப்பவர்களும்,மகனை பிரிந்து வாழும் சூழலில் உள்ள அம்மாவும் எப்படிபட்ட  மனநிலையில் இருப்பார்கள்.

இதுபோன்று ஒரு தருணத்தில்,தாய் தன் பிள்ளைகளை எவ்வாறு  நினைப்பார் என்பதை பல்வேறு சூழல் நிலைமையை வைத்து சிலர் பதிவிட்டுள்ள வார்த்தைகள்..

1.விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..

2.ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..
 படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!

3.தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...

4.புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"

5. 'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!

6.ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...

7.வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!

8.அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..

தாய்க்கும் பிள்ளைக்கும்  சமர்ப்பணம் ..இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான் .....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை