"நீ போராடிட்டே இரு"... ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகாது..! திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் வாபஸ் வாங்கவே முடியாது..! அமித்ஷா அதிரடி..!

By ezhil mozhiFirst Published Jan 22, 2020, 12:57 PM IST
Highlights

என்னுடன் விவாதிக்க மம்தா பானர்ஜி, மாயாவதி, ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் இவர்கள் அனைவரும் தயாரா என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

"நீ போராடிட்டே இரு"... ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகாது..! திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் வாபஸ் வாங்கவே முடியாது..! அமித்ஷா அதிரடி..! 

யார் போராடினாலும், எவ்வளவு நாள் போராடினாலும், என்ன செய்தாலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போது, "சிஏஏ பற்றி தொடர்ந்து எதிர்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து என்னுடன் விவாதிக்க மம்தா பானர்ஜி, மாயாவதி, ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் இவர்கள் அனைவரும் தயாரா..? என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

மேலும் சமீபத்தில் வெளியான அயோத்தி தீர்ப்பின்படி அடுத்து வரும் மூன்று மாதங்களில் ராமர் கோவில் கட்டும் பணி துவங்கப்படும் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போராடுபவர்கள் தொடர்ந்து போராடி கொண்டே இருக்கலாம்.. ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகாது என குறிப்பிட்டு உள்ளார். 

click me!