இது கால் தானா? கடிகார முள் போல காலை சுழற்றி.. கின்னஸில் இடம்பெற்ற பெண்!!

By Ma riyaFirst Published May 4, 2023, 6:31 PM IST
Highlights

தன்னுடைய காலை பின்னிருந்து முன்னால் சுழற்றி அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அது பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ... 

நாம் கால்களை முன்னோக்கி அல்லது பின்னோக்கி ஆட்டுவோம், பக்கவாட்டில் கொஞ்சம் வளைத்திருப்போம். ஆனால் கால்களை கடிகார முள் போல சுற்றமுடியுமா? நினைத்து பார்த்தாலே வியப்பு மேலிடுகிறதே! அமெரிக்க பெண் ஒருவர் தனது கால்களை முன்னும் பின்னுமாக கடிகார முள் போல வெவ்வேறு திசைகளில் திருப்பி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

நியூ மெக்சிகோவின் அல்புகர்கியூவைச் சேர்ந்தவர், கெல்சி க்ரப். இவர் தான் தன்னுடைய பாதத்தை 171.4 டிகிரி சுழற்றி கின்னஸ் சாதனை செய்துள்ளார். இது தொடர்பாக கெல்சி செய்தியாளர்களிடம் பேசியபோது,"நான் நூலகத்தில் பணி செய்கிறேன். புதிய உலக சாதனைப் புத்தகம் வெளிவந்தபோது என்னுடைய சக ஊழியர் ஒருவர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண் தன் காலை முறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதை கண்டதும் என்னாலும் அதை செய்ய முடியும் என்ற எண்ணம் வந்தது. அப்படிதான் என் பாதங்கள் சுழல தொடங்கியது"என்றார். 

Latest Videos

கெல்சி தனது கணுக்காலை முற்றிலும் இயற்கையான முறையில் திருப்ப முயன்றுள்ளார். அது அவருக்கு எந்த வலியையும் ஏற்படுத்தவில்லை என்பது கேட்கும்போதே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. யோசித்து பாருங்கள்... கணுக்காலை அசாரணமாக சுழற்றினால் நமக்கு வலிக்காமல் இருக்குமா? ஆனால் கெல்சி பெரிதாக எந்த வலியையும் உணரவில்லை. அதுவே அவரை கின்னஸ் சாதனை வரையிலும் அழைத்து சென்றுள்ளது. 

கெஸ்லிக்கு ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் பழக்கம் இருந்துள்ளது. அதுவும் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளது. உலகில் எத்தனை விசித்திரமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள், சிலர் தங்கள் ஆரோக்கியம் ஒரு பெரிய வரம் என்று நினைக்கிறார்கள், இன்னும் சிலர் வேறு சில சாகசங்களுக்குச் சென்று தங்கள் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.

இதையும் படிங்க: குழந்தைக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுக்குறீங்களா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

சிலர் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். சிலர் சாதனை படைக்க எலும்பை உடைப்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடையலாம். மல்யுத்தத்திலோ அல்லது வேறு சில மோட்டார் பந்தயத்திலோ விழுந்து மூட்டு உடைந்து சாதனை படைத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக இந்த நபர் தன் உடலில் 46 மூட்டுகளை உடைத்துள்ளார். 

இப்படியும் சாதிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? . கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தகவல்களின்படி, ஸ்வீடனைச் சேர்ந்த 23 வயதான ஒல்லே லுண்டின் என்ற இளைஞர் தனது உடலில் 46 மூட்டுகளை வரிசையாக உடைத்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நேபாளத்தின் கமல் பொக்ரேல் செய்த சாதனையை முறியடித்துள்ளார். அவர் 40 மூட்டுகளை உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வெயிலில் சுற்றி சருமம் கருத்து போனால் அரிசி மாவு 1 போதும்! 10 நிமிடத்தில் முகம் பளிச் என்று மாற பேஸ் பேக் ரெடி

click me!