பாம்பு கொட்டாவியை பார்த்திருக்கிறீர்களா? இதோ மிரள வைக்கும் அரிய வீடியோ!

By Ma riya  |  First Published May 3, 2023, 12:07 PM IST

பெரும்பாலும் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்திருப்போம். ஆனால் பாம்பு கொட்டாவியை பார்த்திருக்கிறீர்களா? வீடியோ உள்ளே! 


பூமியில் உள்ள சில விலங்குகளை கண்டால் மனிதனுக்கு அச்சம் தொற்றி கொள்ளும். யானை, சிங்கம், புலி வரிசையில் பாம்புகளுக்கும் பலர் பயப்படுவார்கள். பாம்பை தெய்வமாக வழிபட்டாலும் கூட, நேரில் பாம்பை கண்டால் பதறாதவர்கள் குறைவு.

நாம் பொதுவாக பாம்பு சட்டை என்னும் பாம்பில் உரிந்த தோலை பார்த்திருப்போம். பாம்பு படம் எடுத்து ஆடுவதையும், நம்மை கடந்து செல்வதையும் கண்டிருப்போம். ஆனால் பாம்பு கொட்டாவியை பார்த்திருக்கமாட்டோம். இங்கு வீடியோ இணைப்பு உள்ளது. 

Tap to resize

Latest Videos

பாம்புகளின் சுவாரஸ்யமான உண்மைகள் 

  • பொதுவாக பாம்புகள் ரொம்ப கூச்ச சுபாவமுள்ளவை. இரகசியமானவை. தானாக சண்டையிடவோ அல்லது யாரையும் கடிக்கவோ அவை செல்வது இல்லை. 
  • தற்காப்புக்காக அவை சீறும். வேட்டையாடுவதற்காக தான் பாம்புகள் தாக்குகின்றன. 
  • இனச்சேர்க்கை காலத்தைத் தவிர, பாம்புகள் பெரும்பாலும் தனிமையில் தான் வசிக்கும். 

இதையும் படிங்க: இன்று பிரதோஷம்! இந்த 5 எழுத்து மந்திரம் உச்சரித்தால் சிவனருள்!! புதன்கிழமை பிரதோஷத்திற்கு இத்தனை சிறப்புகள்!

  • உலகில் சுமார் 3 ஆயிரம் வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 600 விஷம் கொண்டவை. அதிலும் சுமார் 200 மட்டுமே மனிதர்களுக்கு குறிப்பிடத்தக்க காயத்தை ஏற்படுத்தும். மனிதனை கொல்லும் திறன் கொண்டவை. 
  • பாம்புகளின் விஷம் இரையை அசையாது மற்றும் சதையை கிரகிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. 
  • பாம்புகள் நாக்கில் வீசும் வாசனையை வைத்து, எந்த திசையில் வருகிறது என்று கூட சொல்ல முடியும். இவை சூரியனை நம்பியிருக்கின்றன. வெப்பம் இன்றி தங்களுடைய உணவை செரிக்க அவைகளுக்கு ஆற்றல் கிடைப்பதில்லை. 
  • பாம்புகளுக்கு கண்பார்வை இல்லை. அவை இயக்கத்திற்கு பதிலளிக்கின்றன.  
  • பாம்புகள் மற்ற விலங்குகளை போல தான். உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.  

 

Have you ever seen a snake yawn? pic.twitter.com/zgbYJhtYVs

— Terrifying Nature (@TerrifyingNatur)
click me!