ஆன்மிகம் முதல் மருத்தும் வரை  'பச்சை கற்பூரத்தின்' பயன்கள்...எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க..

By Kalai Selvi  |  First Published Aug 30, 2023, 3:44 PM IST

இத்தொகுப்பில் நாம் பச்சை கற்பூரத்தின் பயன்கள் பற்றி பார்க்கலாம். 


பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை இவை இரண்டும் ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று அழைப்பர். இந்த கற்பூரத்தை நம் முன்னோர்கள் உணவு, ஆன்மிகம், அழகு குறிப்புகள் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தினர். அந்தவகையில் இப்போது இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

உணவில் பச்சை கற்பூரம்:
நம் உணவில் விரைவில் பூஞ்சை ஏற்படாமல் இருக்க பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்தலாம். இன்றைய காலத்தில் நம் உணவு கெடாமல் இருக்க பிரிட்ஜ் பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு அப்படி அல்ல. இந்த கற்பூரத்தை தான் பயன்படுத்தினர். இது உணவில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், உணவின்  சுவையை அதிகரிக்கவும் இந்த பச்சை கற்பூரம் பயன்படுகிறது.

இதையும் படிங்க:  பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

மருத்துவத்தில் பச்சை கற்பூரம்:

  • உங்களுக்கு தெரியுமா கோவிலில் கொடுக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து தான் கொடுப்பார்கள். ஏனெனில், இது மருந்தாகவும், சுவை அதிகரிக்கவும், கடவுளின் ஆசி மக்களுக்கு கிடைக்கவும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்கமாகும்.
  • அதுபோல் சளித்தொல்லை, சுவாச கோளாறு, சைனஸ், அலர்ஜி மற்றும் நோய்தொற்று ஏற்படாமல் இருக்க பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இந்த பச்சை கற்பூரம் இவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க மிகவும் உதவுகிறது.
  • பச்சை கற்பூரத்தின் மற்றொரு மருத்துவ பயன் என்னவென்றால், நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு செம்பு அல்லது மண் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின் அந்த தண்ணீரை மறுநாள் காலை குடித்தால் அந்நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். குறிப்பாக இந்நீரை பேச்சு வராத குழந்தைகள் குடித்தால் அவர்கள் விரைவில் பேசுவார்கள்.
  • மேலும் உங்களுக்கு பித்த வெடிப்பு இருந்தால் கற்பூரத்தை கிரீம் ஆகவும் பாதத்தில் பயன்படுத்தி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

ஆன்மிகத்தில் பச்சை கற்பூரம்:
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் இருக்கு தெரியுமா? செல்வம் பெற நீங்கள் சோம்பு, கிராம்பு, மஞ்சள், பச்சை கற்பூரம், கருமஞ்சள், சிறிய தேங்காய், குணுகு, கோரோசனை, ஜவ்வாது, குன்றின் மணி, கோமதி சக்கரம், சோலி மற்றும் சிறிய தர்பை துண்டு ஆகிய அனைத்தையும் ஒரு பாத்திரம் அல்லது துணியில் கட்டி பூஜை அறை மற்றுமகாசோலை ஆகிய இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்.

அதுபோலவே, பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும். மேலும்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலை நீக்க இந்த பச்சை கற்பூரம் உதவுகிறது.

இதையும் படிங்க: உங்களுக்குத் தெரியுமா? கற்பூரத்தை பயன்படுத்தி இறந்தவர் உடலைகூட பதப்படுத்தலாம்...

சொல்லபோனால் பச்சை கற்பூரம் நல்ல வாசனை நிறைந்தது. வாசனை உள்ள இடத்தில் தான் லட்சுமி குடியேறுவாள். எனவே, இந்த பச்சை கற்பூரத்தை மேலே சொன்னது போல 
பயன்படுத்தினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.

click me!