பிரியாணி பிரியர்களே ....!!!  எத்தன பிரியாணி இருக்கு பாருங்க .....!!!

First Published Dec 28, 2016, 2:45 PM IST
Highlights


பிரியாணி பிரியர்களே ....!!!  எத்தன பிரியாணி இருக்கு பாருங்க .....!!!

அசைவ  பிரியர்களுக்கு பிரியாணி என்றாலே தனி பிரியம் தான்.  அதிலும் விதவிதமான பிரியாணி என்றால் எந்த அளவுக்கு  விரும்பி  சமைத்து சாப்பிடுவார்கள்  என  பாருங்க ....

சாப்பாட்டு பிரியர்கள் அனைவருக்கும் பிரியாணி பிடிக்கும். சைவமாக இருப்பினும் சரி, அசைவமாக இருப்பினும் சரி. இரண்டு பிரிவிலும் பல வகை பிரயாணிகள் கிடைக்கின்றன. முக்கியமாக பேச்சுலர் வாழ்க்கையும் பிரியாணியும் ஒரு சுவையான காதல் என்றே கூறலாம்.

சிலரால் பிரியாணி இல்லாத வார இறுதியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஞாயிறுகளில் மதியம் வீட்டில் கமழும் அந்த பிரியாணி வாசத்திற்கு ஈடிணையே இல்லை. உங்களுக்கு பிரியாணி பிடிக்கும், நீங்கள் ஒரு பிரியாணி பிரியர் என்றால் நீங்கள் இந்த பிரியாணி வகைகளை சுவைத்தே ஆகவேண்டும்

கல்கத்தா பிரியாணி!

அவாதி (Awadhi) எனும் வகையில் இருந்து பிறந்தது தான் இந்த கல்கத்தா பிரியாணி. இதில் ஃப்ளேவர்கள் அதிகம் இருக்கும். காரம் சற்று குறைவாகவும், அதனுடன் முட்டை மற்றும் உருளைக்கிழங்கும் தனிதன்மைக்காக சேர்த்திருப்பார்கள்.

ஐதராபாத் பிரியாணி!

பாஸ்மதி அரிசி மற்றும் மட்டன் கொண்டு தயாரிக்கப்படும் ஐதராபாத் பிரியாணி மிகவும் பரிட்சயமான ஒன்று. இதன் தனித்துவமான விஷயமே இதில் சரிக்கு சரியான அளவில் அரிசியும் இறைச்சியும் சேர்க்கப்பட்டிருக்கும்.

லக்னோ பிரியாணி!

இதை அவாதி பிரியாணி என்றும் அழைப்பார்கள். இது முகலாய சமையல் வகை சார்ந்தது. இதை ஒருமுறை நீங்கள் சாப்பிட்டுவிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஏங்க வைக்கும் சுவை தரவல்லது ஆகும்.

 

திண்டுக்கல் பிரியாணி!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி உலக ஃபேமஸ். தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரியாணி இது. காரம் மற்றும் மசாலா சற்றே தூக்கலாக இருக்கும். மணம் அதிகமாக இருக்கும்.

சிந்தி பிரியாணி!

ஸ்பெஷல் இறைச்சி மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் காரசாரமான பிரியாணி, தனித்துவமான அதீத மணம் கொண்டிருக்கும்.

பேரி பிரியாணி!

மசாலா மற்றும் காரம் சரியான அளவில் சேர்ப்பு கொண்டுள்ள வகையில் சமைக்கப்படும் பிரியாணி வகை இது. இறைச்சி மட்டும் அல்லாமல் பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சி தாராளமாக சேர்த்து இந்த பிரியாணி சமைக்கப்படுகிறது.

மெமோனி (Memoni) பிரியாணி!

மெமோன் (memon) எனும் தெற்காசியாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர்-ன் தனித்துவமான பிரியாணியாக இது விளங்கி வந்தது. ஆனால், இது இப்போது மெல்ல, மெல்ல எல்லா பகுதிகளிலும் பிரபலம் அடைந்து வரும் பிரியாணியாக மாறி வருகிறது.

இதுபோல  பல வகை  பிரியாணி உள்ளது.  இதில் எது வேண்டுமோ  அதை   சமைத்து  நன்றாக  சாப்பிடுங்க.....

click me!