
உங்கள் முகத்தை பார்த்து ஆலோசனை வழங்கும் “ ஸ்மார்ட் கேமரா கண்ணாடி “....!!!
கண்ணாடி பல இடங்களில் , பல துறைகளில் பயன்படுகிறது. குறிப்பாக கண்ணாடியில் முகம் பார்க்கும் கண்ணாடி என்றால், அதில் ஏகப்பட்ட மாடல்கள் உள்ளன.
நமக்கு பிடித்த மாடல்களில் காண்டி வடிவமைத்து கேட்டு வாங்க முடிகிறது.
நம் வீட்டில் , அழகான நம் மனதிற்கு பிடித்த ஒன்று இருக்கும் என்றால் அதில் கண்ணாடியும் ஒன்று.
இதுபோன்ற கண்ணாடிகளில், தற்போது மேலும் ஒரு ரசனை கூட்டும் வகையில் ஒரு புதிய யுக்தியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாம் பயன்படுத்தும் கண்ணாடியின் மேற்புறம், ஒரு கேமரா பொறுத்தப்படும்.அதாவது சிறப்பு கேமரா. இந்த கண்ணாடியை நாம் பார்க்கும் போது, நம் முகத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் துல்லியமாக தருகிறதாம்.
அதுமட்டும் இல்லாமல், நம் முகத்தில் உள்ள எண்ணெய் பசை அழுக்கு எதுவாக இருந்தாலும் புட்டு புட்டு வைக்கிறதாம் இந்த கண்ணாடி. மேலும் அதற்குண்டான ஆலோசனைகளையும் வாரி வழங்குகிறதாம் இந்த கண்ணாடி ...
இப்படியே போனால், ஆக மொத்ததுல , நம் மூளை நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை கூட துல்லியமாக சொல்லும் போல....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.