ஜனவரி 30 முதல் ஏர்செல் சேவை அதிரடி ரத்து..! உடனே மற்ற நெட்வொர்க் மாறுங்க...!

 
Published : Dec 21, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஜனவரி 30 முதல் ஏர்செல் சேவை அதிரடி ரத்து..! உடனே மற்ற நெட்வொர்க் மாறுங்க...!

சுருக்கம்

aircel service will be declinded after jan 30 said trai

ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.

பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல்லின் சேவையை 6 மாநிலத்தில் ஜனவரி 30 முதல் அதிரடியாக நிறுத்த உள்ளது  என தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது

ஜியோ வந்தவுடன்,வோடபோன், ஐடியா உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கைவசம் வைத்துக்கொள்ள கடும் போட்டியை சந்தித்தது.

ஆனாலும் ஜியோவின் இலவச டேட்டா மற்றும் ப்ரீ வாய்ஸ் கால்ஸ் வந்த பிறகு, பெரும்பாலான மற்ற நெட்வொர்க் சேவையிலிருந்து ஜியோவிற்கு மாறினர்.

இந்நிலையில்,ஏர்செல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள பல அதிரடி சலுகையை வாரி வழங்கியது...ஆனால் முடிவில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால்,குறிப்பிட்ட 6 மாநிலத்தில் ஏர்செல் சேவையை நிறுத்த உள்ளதாக டிராய் தெரிவித்து உள்ளது

குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.

இங்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும்,இந்த வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இம்மாநிலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் வரும் கோரிக்கையை 2018 மார்ச் 10 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், அதுவரை ஏர்செல் சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஆனால்,தமிழ்நாட்டில் ஏர்செல் சேவை எந்த விதத்திலும் பாதிப்படையாது எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,ஏர்செல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்தால்,மிக சிறந்த சேவையை வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்து உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்