AI Sleeping tips: தூக்கமின்மைக்கு எளிய தீர்வுகளை வழங்கியிருக்கிறது ஏஐ எனும் தொழில்நுட்பம். இந்த விஷயங்கள் வைரலாகி வருகிறது.
Tamil health updates sleeping tips: அண்மை காலங்களில் மனிதர்களுக்கு தூக்கக் கோளாறுகள் அதிகமாகிவருகிறது. இதில் வயது வித்தியாசமே இல்லை. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை தூக்கம் வராமல் இரவில் நெளிந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் நம்முடைய நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் தூக்க பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
முறையாக தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது சரியாக தூக்கம் இல்லாதவர்களுக்கு உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்களும் விரைவில் வரலாம். இந்த இக்கட்டான சூழலில், ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வை அளிக்கலாம் என ஒரு நம்பிக்கை கீற்று ஏற்பட்டுள்ளது.
தூக்கமின்மை தீர்வு
இது குறித்து மருத்துவர் ஒருவர் பேசும் போது,"செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. ஏஐ (AI) மூலம் தூக்கக் கோளாறை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து தூக்கக் கோளாறுகளை நுண்ணிய அளவில் புரிந்து கொள்ளலாம். ஏஐ தூக்கக் கோளாறுகள் குறித்த நல்ல ஆராய்ச்சிக்கு உதவும்.வருங்காலத்தில் தூக்கமின்மை பிரச்சனைகளை ஏஐ உதவியுடன் முற்றிலும் தீர்க்க வாய்ப்புள்ளது"என்றார்.
இதையும் படிங்க: eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை செய்யும் திறனை செயற்கை நுண்ணறிவு செய்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பதை பயன்படுத்தி இப்போது நிறைய ஆப்ஸ் (apps) வந்துவிட்டன. கூகுள் ஏஐ (Google AI) உங்களுக்கு தூக்கத்திற்கான நினைவூட்டல்களை கொடுக்கும். உங்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் தொட்டில்
உங்களுக்கு ஸ்மார்ட் தொட்டில் தெரியுமா? இந்தியாவில் இப்போது தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் தொட்டில் பரவலாகி வருகிறது. இந்த தொட்டிலில் குழந்தைகளின் தூக்கத்தை கண்டறியும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இது குழந்தையின் விழிப்பு, அசைவுகளை கண்டறியும். இதனால் தூக்க கோளாறை சமாளிக்கலாம். நல்ல தூக்கம் தான் உடல், மன ஆரோக்கியத்தை நன்றாக வைக்கிறது. ஏஐ மூலம் மக்களுக்கு தூங்குவதற்கான நினைவூட்டல்களை ஏற்படுத்தலாம். தூங்கும் முறையை திட்டமிட்டு செய்ய முடியும்.
இதையும் படிங்க: எப்போதும் வீட்டில் பணம் பெருகணுமா? இந்த 4 பொருள் ஒன்றாக இருக்கணும்.. அவ்வளவுதான் பண ராசி வந்திடும்..!