மீண்டும் மழை..! மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசுமாம் ..!

Asianet News Tamil  
Published : Apr 18, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
மீண்டும் மழை..! மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசுமாம் ..!

சுருக்கம்

again rain will start in south

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது.

குமரி கடல், மாலத் தீவு மற்றும் கச்சாதீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி காணப்படுபதால்,பலத்த காற்றுடன் கூடிய மழை பெறுவதற்கான வாய்ப்பு   அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள்  எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது  

காற்றின் வேகம்

மணிக்கு 30 முதல் அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வரையில் காற்று  வேகமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோடை வேளையில், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகதின் தென் மாவட்டங்களில் நல்ல  மழை அவ்வப்போது பெய்து வருவதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்