வரும் 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை இருக்காது – ஆய்வில் அதிரடி...!!!

 
Published : Nov 05, 2016, 04:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
வரும் 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை இருக்காது – ஆய்வில் அதிரடி...!!!

சுருக்கம்

வரும் 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை இருக்காது – ஆய்வில் அதிரடி...!!!   

கடந்த  சில நாட்களாக , தமிழகத்தில்  மழை  பெய்து வந்த நிலையில், தற்போது,  மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்வதால்,  வருகிற நவ.6ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே, தற்போது  250 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகி செல்லும் வேளையில், வருகிற 6ஆம் தேதிக்கு மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்