வெறும் "6 ஆயிரத்தில் வெண்டிலேட்டர் தயார்"..! இந்திய தொழிலதிபர் சாதனை.! அரசு செவி சாய்க்குமா..?

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 1:59 PM IST
Highlights

இந்த ஒரு இக்கட்டான நிலையில் வெறும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மலிவு விலை வெண்டிலேட்டரை ஒடிசா தொழிலதிபர் ஒருவர் தயாரித்துள்ளது மனதிற்கு ஒரு ஆறுதல் தருகிறது

வெறும் "6 ஆயிரத்தில் வெண்டிலேட்டர் தயார்"..! இந்திய தொழிலதிபர் சாதனை.! அரசு செவி சாய்க்குமா..?

நோய் தோற்று இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை  சுவாச காற்று அளிக்க தேவையான வெண்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது என  கருதப்பட்ட்டது. இந்த நிலையில் அரசும் வெண்டிலேட்டர் உற்பத்தி மற்றும் வாங்கும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறது.



இந்த ஒரு இக்கட்டான நிலையில் வெறும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மலிவு விலை வெண்டிலேட்டரை ஒடிசா தொழிலதிபர் ஒருவர் தயாரித்துள்ளது மனதிற்கு ஒரு ஆறுதல் தருகிறது. இந்த ஒரு தருணத்தில் இந்த தேவை  மக்களுக்கு தேவைப்படும் என்றே கருதலாம்

ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான். இவருக்கு தற்போது வயது 52. இவர், ஏற்கனவே ஸ்டெபிலைசர் மற்றும் சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் வேலையையும், உற்பத்தி  செய்யும் தொழிலையும் செய்து வருகிறார்.



இவருக்கு ஏற்கனவே மருத்துவ உபகாரணங்கள் குறித்து விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், அவராகவே  மார்க்கெட்டில் கிடைக்கும் வென்டிலேட்டருக்கான உதிரி பாகங்களை வாங்கி .. குறைந்த பொருட்செலவில்  வெண்டிலேட்டர் உருவாக்கி  உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கு போது "தனது கருவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க வேண்டும்". அவ்வாறு அங்கீகாரம் கிடைத்தால் வெறும் ரூ.6 ஆயிரத்திற்கு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும்  ஒருநாளைக்கு குறைந்து 15 வெண்டிலேட்டர் அவருடைய  நிறுவனத்தில் தயாரிக்க முடியும் எனவும்  தெரிவித்து உள்ளார்.


வெண்டிலேட்டர்  பற்றாக்குறை ஏற்படுமா என்ற  நிலை உள்ளபோது, ஓர் இந்தியர் அனுபவ பூர்வமாக  வெண்டிலேட்டர்  தயாரித்து உள்ளது பாராட்டுக்குரியது. மேலும்  பெரும் நிறுவனத்திற்கு மட்டும் ஆர்டர் கொடுத்து மிக அதிக விலையில் வெண்டிலேட்டர் தயார் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், தனி மனிதனின்  உழைப்பு, மற்றும் அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் இதனை சோதனை செய்து அரசு அங்கீகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  



 

click me!