"கண்ணீரோடு" ஜன்னல் கதவை திறந்த மனைவி..! "உண்மையான ஆண்மகனின் உன்னத காதல்"..!

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 12:41 PM IST
Highlights

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் கோனர். இவர்க்கு வயது 44.இவரின் மனைவி பெயர் கெல்லி. கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்ட அவர்  ஜனவரி மாதம் முதல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து  வருகிறார். 
 

"கண்ணீரோடு" ஜன்னல் கதவை திறந்த மனைவி..! "உண்மையான ஆண்மகனின் உன்னத காதல்"..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை பிரிந்து இருக்க மனமில்லாமல் மருத்துவமனை வெளியில் கார் பார்கிங்கிலேயே அமர்ந்து தனது காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ள சம்பவம்  அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் கோனர். இவர்க்கு வயது 44.இவரின் மனைவி பெயர் கெல்லி. கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்ட அவர்  ஜனவரி மாதம் முதல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து  வருகிறார். 

தற்போது டெக்ஸாஸில் உள்ள மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சைக்கு பெற்று வருகிறார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கணவர் மனைவியுடன் சிகிச்சையின் போது உடனிருக்க மறுத்துவிட்டது மருத்துவமனை நிர்வாகம். இதனால் என்ன செய்வது என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவர், மனைவியை  பிரிய மனமில்லாமல் மருத்துவமனை வெளியிலேயே காத்திருந்தார் 

இந்த நிலையில் கீமோதெரபி சிகிச்சையால் தலைமுடி இழந்து சோகத்தில் இருந்த கெல்லி, தன் கணவர் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பார் என நினைத்துக்கொண்டே தனிமையில் சிகிச்சை எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கெல்லி போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. இந்த மெசேஜ் பார்த்த மனைவி உடனடியாக ஜன்னல் திறந்து வெளியில் பார்க்கிறார் அதில்,"என்னால் உன்னுடன் இருக்க முடியவில்லை. ஆனால், நான் இங்கு இருக்கிறேன் உனக்காக. லவ் யூ" என்று எழுதி உட்கார்ந்திருந்துள்ளார்.

பார்த்த வேகத்தில் கண்ணீர் மல்க அன்பை உணர்கிறார் மனைவி. இதை கெல்லி புகைப்படமாக எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட தற்போது இது வைரலாகி வருகிறது. தன் மனைவிமீது கொண்ட காதல் காரணமாக கொரோனா அச்சத்திலும் மருத்துவமனை வாயிலில் ஆல்பர்ட் அமர்ந்திருப்பதை பார்க்கும் இந்த  சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவு பெருகி உள்ளது.

சாயாஹரான விஷயத்திற்காகவும், அல்ப ஆசைக்காகவும் எவ்வளவோ பிரச்சனை வரும் போது  உயிர்கொல்லி நோயாக இருந்தாலும் பரவாயில்லை என தன் மனைவியுடன் தான் இருப்பேன் என கணவர் இருப்பது பெரும்பாலோனோருக்கு ஒரு பாடமாக அமைவது போல் உள்ளது. 

click me!