சென்னையில் அதிர்ச்சி! "ஃபீனிக்ஸ் மாலுக்கு" சென்று வந்த தம்பதியினருக்கு "கொரோனா"..! 3 ஆயிரம் பேர் தனிமை..!

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 1:20 PM IST
Highlights

ஒரு குறிப்பிட்ட கடைக்கு சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது சற்று ஆறுதல் தருகிறது. 

சென்னையில் அதிர்ச்சி! "ஃபீனிக்ஸ் மாலுக்கு" சென்று வந்த தம்பதியினருக்கு "கொரோனா"..! 3 ஆயிரம் பேர் தனிமை..!  

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் விஷயமாக சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சற்று வேகமெடுத்து வரும் கொரோனா பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஒரு நிலையில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள  ஒரு கடையில் வேலை பார்த்த பெண் ஒருவருக்கு ஒரு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் பத்தாம் தேதி முதல் 17-ம் தேதி வரை அங்கு சென்று வந்தவர்கள் யாராக இருந்தாலும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அதன்பிறகு அந்த ஒரு குறிப்பிட்ட கடைக்கு சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது சற்று ஆறுதல் தருகிறது. இந்த ஒரு நிலையில் சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் சேர்ந்த தெருவில் வசிக்கம் தம்பதியினருக்கு அறிகுறி தென்பட்டதால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இவர்கள் இருவரையும் சோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கணவர் சில நாட்களுக்கு முன்னதாக வேலை நிமித்தமாக டெல்லி சென்று அதன் பின்  வேளச்சேரிக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!