"உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்..அவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்"..! பெண்களுக்கெல்லாம் ஹீரோவான ஏடிஜிபி ரவி தாறுமாறு..!

By ezhil mozhiFirst Published Dec 19, 2019, 7:34 PM IST
Highlights

மழை வந்தால் குடை நனைந்து விடும் என்பார்கள் அல்லவா..? அந்த குடையாக நாங்கள் இருப்போம். உங்களை நனையாமல் பார்த்துக் கொள்வோம். "உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.. அவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்" என உணர்வு பூர்வமாக பேசி பெண்களின் பெரிய நம்பிக்கையாகவும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பதை உணர்த்தினார் ஏடிஜிபி.ரவி.

"உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்..அவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்"..! பெண்களுக்கெல்லாம் ஹீரோவான ஏடிஜிபி ரவி தாறுமாறு..!  

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு ஏடிஜிபி ரவி பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவி பெண்கள் பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது, "பெரும்பாலான குற்றங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகத்தான் நடைபெறுகிறது. அதனை தடுக்கும் பொருட்டு தமிழக காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "காவலன் செயலி"  அனைவராலும் மிக எளிதாக பயன்படுத்தும் விதத்தில் சில மாற்றங்களை இன்னும் ஒரு வாரத்தில் கொண்டுவரப்படும் என தெரிவித்து இருந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், பெண்களிடம் சில்மிஷம் செய்யும் நபர்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும்  என்பது குறித்தும் பேசினார். அதற்கிடையில் இதையெல்லாம் தாண்டி, மழை வந்தால் குடை நனைந்து விடும் என்பார்கள் அல்லவா..? அந்த குடையாக நாங்கள் இருப்போம். உங்களை நனையாமல் பார்த்துக் கொள்வோம். "உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.. அவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்" என உணர்வு பூர்வமாக பேசி பெண்களின் பெரிய நம்பிக்கையாகவும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பதை உணர்த்தினார் ஏடிஜிபி.ரவி. இத்தனை ஆண்டு காலம் இதை அல்லவா பெண்கள் எதிர்பார்த்தார்கள்..! 

click me!