சபாஷ்..! ஆசிரியரே இல்லாததால்... கிராமத்து மருமகள்களே வகுப்பு எடுத்து சாதனை..! நெகிழும் மாணவர்கள்..!

By ezhil mozhiFirst Published Jun 28, 2019, 3:48 PM IST
Highlights

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் அந்த கிராமத்து பெண்களே பாடம் நடத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபட்டு வருகின்றனர்.
 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் அந்த கிராமத்து பெண்களே பாடம் நடத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபட்டு வருகின்றனர்.

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என இருவர் மட்டுமே இருக்கும் தருணத்தில் கடந்த மூன்றாம் தேதி தலைமை ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றார், தற்போது இடைநிலை ஆசிரியர் மட்டுமே இருப்பதால் செய்வதறியாது அந்த பள்ளியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் மிகவும் பழமையான இந்த பள்ளியை எக்காரணத்தைக் கொண்டும் மூட விடக் கூடாது என எண்ணிய அந்த கிராமத்து மக்கள் சுற்றியுள்ள பல ஊர்களுக்கு சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்குமாறு முயற்சி செய்து வருகின்றனர். அதன் விளைவாக 17 மாணவ செல்வங்கள் மட்டுமே இருந்த இந்த பள்ளியில் தற்போது 32 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இவர்களுக்கு எல்லாம் யார் பாடம் எடுப்பார்கள் என்ற கேள்வி எழும் அல்லவா? வெளியூரிலிருந்து மணமுடித்து வந்திருக்கும் நன்கு படித்த பெண் பிள்ளைகள் மற்றும் இந்த கிராமத்து இளைஞர்கள் அதே ஊரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் தங்கவேலன் என அனைவரும் ஒன்றாக இணைந்து எடுக்கப்பட்ட கூட்டு முயற்சி தான இது. 

தங்கவேலன் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் உணவு என அனைத்தையுமே இவர்களே ஏற்பாடு செய்து தருகின்றனர். இவ்வாறாக ஒரு கிராமமே... அந்த கிராமத்தில் உள்ள நன்கு படித்த இளைஞர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பெரியவர்களுடைய துணையோடு பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சாதனை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!