
நின்னு நின்னு பார்த்தேன்... எந்த பஸ்ஸும் வரல... அதான் அரசு பேருந்தை நானே ஓட்டிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்..!
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்ப காத்திருந்த ஊழியர் ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் எந்த பேருந்தும் வராததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை ஓட்டி சென்று தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுபின் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் பணி முடிவு பெற்றபின் வீடு திரும்ப காத்திருந்தார். அப்போது எந்த ஒரு வாகனமும் வராத காரணத்தினால் மனமுடைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநில அரசின் போக்குவரத்து கழக பேருந்தை திருடி ஒட்டி சென்று அவர் செல்லக்கூடிய இடம் வந்ததும் அங்கேயே விட்டு விட்டு சென்று உள்ளார்.
பின்னர் பேருந்து காணாமல் போனது குறித்து வழக்கு பதிந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.விசாரணையில் ஊழியர் ஒருவரே இவ்வாறு செய்துள்ளதை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார். இந்த சம்பவம் ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் விசாரணையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.