என்ன ஆனாலும் சரி... மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 14, 2020, 04:33 PM IST
என்ன ஆனாலும் சரி... மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!

சுருக்கம்

மயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன்  என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். 

என்ன ஆனாலும் சரி....மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத  விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!  

பல வருடங்களாக திருமணம் ஆகாததால் விரக்தியில் எலக்ட்ரீசியன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன்  என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். பிறகு இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் தந்தை வைத்தியநாதன்.

ஆனால் சேதுராமன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை தெரிந்து கொண்ட பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேதுராமன் நமக்கு திருமணமே ஆகாதா என்ற விரக்தியில் கடந்த 10 ஆம் தேதி அன்று தான் குடித்த மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.இவரைவிட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்