விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்: பிப்., 1, 2 ஆம் தேதியில் நேரடியாக பார்க்கலாம்!

By Rsiva kumarFirst Published Jan 12, 2023, 5:59 PM IST
Highlights

கிட்டத்தட்ட 50000 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் கூட காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதை கண்டுபிடித்தனர். அதாவது, பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று 50000 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வருவதாக அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். இந்த பச்சை நிற வால் நட்சத்திரத்திற்கு சி/2022 ஈ3 (இசட்.டி.எஃப்) என்று நாசா பெயர் வைத்துள்ளது.

தண்ணீர் குடிக்க பயந்தால்.. ஆயுட்காலம் குறையும் - தெரியுமா உங்களுக்கு..?

இந்த அரிய வகையான பச்சை நிற வால் நட்சத்திரமானது இந்த மாத கடைசியிலோ அல்லது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் பூமிக்கு மிக அருகிலேயே தென்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி நம்மால் வெறும் கண்ணால் கூட காண முடியும் என்றும், பகலில் தொலைநோக்கி கருவி (பைனாக்குலர்) கொண்டும், இரவில் வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவேகானந்தர் ஜெயந்தி: வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் பொன்மொழிகள்!

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. சூரியனைச் சுற்றிலும் ஒரு சுற்றுப் பாதையை இந்த வால் நட்சத்திரம் கொண்டுள்ள நிலையில், பூமியை சுற்றி வர அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

click me!