கேம்ஸ் விளையாடி பறிபோன பார்வை ..! உஷார்..! நாளை நமக்கும் தான் ...!

First Published Oct 10, 2017, 8:59 PM IST
Highlights
a girl lost her eyes due to playing games in smartphones frequently


ஸ்மார்ட் போன் வைத்திருபவர்கள் எல்லாம்  தாம் ஸ்மார்ட் ஆகத்தான் வேலை செய்கிறோம் என நினைத்து  பல விஷயங்களில்  தன்னையே  மாய்த்துக்கொள்ளும் இந்த மாய உலகில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள்

யாரை பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் போன் இல்லாமல் இருப்பது இல்லை.... அதிலும் பாடல் கேட்பது, ஆடல்  பார்ப்பது  என  தொடங்கி ..... தற்போது விளையாட்டு   அதாவது  கேம்ஸ் என அனைத்தும்  ஒரே போனில்  தான்......

உணவை  உட்கொள்ளவும்,  உடலளவில்  வேலை  செய்வதற்கும், பாத்  ரூம் சென்று  உபாதை கழிப்பதற்கும்  தான் ... நாம்  இருக்கும் இடத்தை விட்டு எழுந்து  நகர்கிறோம்... மற்றவை  எல்லாம் ஸ்மார்ட் போனில் தான் ... இன்னும் சொல்ல வேண்டும் என்றால்...தாம்பத்ய உறவில் ஈடுபடுவது கூட எப்படி என  வீடியோ பார்த்துக்கொண்டே ஒரு விதமான மயக்கத்தில்  ஸ்மார்ட் போனிலே வாழ்ந்து  வருகின்றனர் 

இவ்வாறு தொடர்ச்சியாக போனை  பல மணி  நேரம் பயன்படுத்துவதால்.... எண்ணிலடங்கா பிரச்சனைகள்  இருந்தாலும்,  இன்று  நடந்த பல  பிரச்சனைகளில்  ஒரு பிரச்னை  பற்றி  மட்டும் பார்க்கலாம்.

சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. 

நிதி நிறுவனத்தில் பணியாற்றும் அந்த பெண் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறிஉள்ளார். வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். “விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான் காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட தொடங்கிவிடுவேன், அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவேன், மாலை 4 மணிவரையில் கேம்தான் விளையாடுவேன்,” என பாதிக்கப்பட்ட பெண் கூறிஉள்ளார். சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவேன் என குறிப்பிட்டு உள்ளார். 

என்னுடைய பெற்றோர் சாப்பிட அழைத்தாலும் அதனை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடுவேன் என குறிப்பிட்டு உள்ளார்.இன்று தான்  அந்த  பெண்  உணர்ந்துள்ளார் விளையாட்டின்  மோகமும் ....தொலைந்து  போன  வாழ்க்கையையும்......

click me!