10 ஆம் வகுப்பு தேர்வெழுத குதிரையில் பறந்த பெண் யார் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Apr 10, 2019, 3:23 PM IST
Highlights

கடந்த சில தினங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தான் வளர்த்து வந்த குதிரையில் பயணம் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது

கடந்த சில தினங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தான் வளர்த்து வந்த குதிரையில் பயணம் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணா என்ற பெண் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத புத்தக பையுடன் சீருடையில், தான் வளர்த்து வந்த குதிரை மீது அமர்ந்து அசுரவேகத்தில் ஓட்டி சென்றார். இதனை சாலையில் சென்ற மற்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரல் ஆனது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் அந்தப் பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சபாஷ் போட்டனர். பின்னர் யார் இந்த பெண் என்ற தேடுதலும் சமூகவலைதளத்தில் பரவலாக பார்க்க முடிந்தது.

பின்னர் இந்த பெண் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும் திருச்சூரை சேர்ந்தவர் என்றும் இவர் தினமும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹார்ஸ் ரைடிங் செல்லக்கூடிய பெண் என்றும் தெரிய வந்துள்ளது

தற்போது கிருஷ்ணா வீட்டில் இரண்டு குதிரைகள் உள்ளன. இந்த இரண்டு குதிரைகளும் அவரது அப்பா பரிசளித்தது.11 வயது பிறந்தநாளின் போது கிருஷ்ணாவுக்கு அவரது அப்பா குதிரையை பரிசளித்திருக்கிறார். பின்னர் 10 வகுப்பு படிக்க தொடங்கும் போது மற்றொரு குதிரையை பரிசளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!