கொசுக்கள் பற்றி உங்களுக்கு தெரியாத அதிர்ச்சி விஷயம் இதோ..!

By ezhil mozhiFirst Published Jul 22, 2019, 7:39 PM IST
Highlights

கோடைக்காலத்தில்தான் கொசுக்கள் நம்மை தாக்கி ஒருவழிப் பண்ணும். 5 பேரில் ஒருவரை தங்கள் பசிக்காக நாடி வந்து இரத்த உறிஞ்சும்.

கொசுக்கள் பற்றி உங்களுக்கு தெரியாத அதிர்ச்சி விஷயம் இதோ..! 

கோடைக்காலத்தில்தான் கொசுக்கள் நம்மை தாக்கி ஒருவழிப் பண்ணும். 5 பேரில் ஒருவரை தங்கள் பசிக்காக நாடி வந்து இரத்த உறிஞ்சும். 

உலகில் மொத்தம் 3000 கொசு இனங்கள் இருக்கிறதாம். அவற்றில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 கொசு இனங்கள் குடியிருக்கிறதாம். 

கொசுக்கடியில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வது மூளைக் காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற கொடிய வியாதிகளில் காப்பாற்றிக் கொள்வதற்கு சமம்.

ஒவ்வோரு வருடமும் உலகம் முழுவதும் 10 முதல் 20 இலட்சம் பேர் வரை கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இறந்தும் போகின்றனர். 

பொதுவாக நம்மை அடிப்பது ஆண் கொசுக்கள் அல்ல. பெண் கொசுதான். பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் இரத்தத்தில் இருக்கும் புரதம், இரும்புச் சத்து போன்றவற்றை தேடி வருகிறது. 

நமது உடலில் இருக்கும் கார்பன் டைஆக்சைடு, லேக்டிக் ஆசிட், அம்மோனியா, கார்போக்ஸிலிக் ஆசிட், ஆக்டினால் போன்றவை கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும். மனிதர்களை சில கொசுக்கள் கடிப்பதில்லை. மாறாக அவை பல்லி, தவளை, பாம்பு போன்றவற்றை கடிப்பதில் ஆர்வம் காட்டும். 

ஒரு சாதாரண கொசு ஐந்து முதல் ஆறு மாதங்கல் வரை உயிர் வாழும். என்ன இந்த தகவல்களை எல்லாம் கேட்கும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதா?

click me!