132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்காத அதிசயம்...

By Muthurama LingamFirst Published Jul 22, 2019, 4:31 PM IST
Highlights

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட ‘பிறக்கவில்லை’என்ற அதிர்ச்சி செய்தி நாடெங்கும் பரவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட ‘பிறக்கவில்லை’என்ற அதிர்ச்சி செய்தி நாடெங்கும் பரவி வருகிறது.

அங்கு நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 132 கிராமங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாவட்ட நிர்வாகத்தை அதிரச்செய்துள்ளது.

மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு படிப்பை வழங்கவும் திட்டங்களை முன்னெடுக்கிறது. பெண் குழந்தைகளின் பாலிய விகிதத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவு கவலையளிப்பதாக உள்ளது. இதற்கு மத்தியில் 132 கிராமங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட் அசிஷ் சவுகான் பேசுகையில், “இப்பகுதியில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இப்பகுதியில் இப்படியொரு தாக்கத்திற்கான காரணம் என்னவென்று ஆய்வை மேற்கொள்கிறோம், கண்காணிக்கிறோம். இதுதொடர்பாக ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்,” எனக் கூறியுள்ளார்.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் விரிவான ஆலோசனையை மேற்கொண்டார். கிராமங்கள் முழுவதும் ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பை தொடரவும், ஆய்வு அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டார். சமூக சேவகர் கல்பனா தாக்கூர் பேசுகையில், பெண் குழந்தைகள் இல்லாமைக்கு பெண் சிசுக்கொலை பரவுவதை தெளிவாக குறிக்கிறது. இந்த கிராமங்களில் மூன்று மாதங்களாக எந்தப் பெண் குழந்தையும் பிறக்கவில்லை. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. இது மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை நடப்பதை தெளிவாக குறிக்கிறது. அரசாங்கமும் நிர்வாகமும் எதுவும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

click me!