"8.3 சதவீத வட்டியுடன்"..அஞ்சலகத்தில் அட்டகாச திட்டம்...!

First Published Apr 23, 2018, 4:48 PM IST
Highlights
a best scheme for senior citizen in post office


அஞ்சலகத்தில் இப்படி ஒரு சேவிங் ஸ்கீம் இருக்கு...! உங்களுக்கு தெரியுமா...?

அஞ்சலகத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்பது தெரியும். ஆனால் அந்த திட்டங்களின் நற்பலன்கள் முழுமையாக தெரித்திருக்க வேண்டும் அல்லவா..?

அதிலும் குறிப்பாக,மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில், ஆண்டு தோறும் 8.3 சதவீத வட்டி வழங்கப் படும் .

தபால் அலுவலகத்தில் அதிகமான வட்டி தொகை இந்த திட்டத்திற்கே உண்டு .

60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்

தொகை

குறைந்தபட்சமாக 1000  முதல் 15,00,000  வரை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்

முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்

வட்டியானது  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்

5 ஆண்டு கழித்து கட்டிய தொகை முழுவதுமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வரிவிலக்கு உண்டு

ஆனால் வட்டி வருவாயானது ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்தை தாண்டும் போது, அந்த வருவாய்க்கு வரிப்பிடித்தம் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்கள்

 மூத்த குடிமக்களுக்கு இந்த ஒரு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூத்த  குடிமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சமயத்தில்,அவர்கள் யாருடைய உதவி இல்லாமலும் சிறந்த முறையல்,கிடைக்கும் வட்டியை வைத்தே வாழ்க்கை  நடத்த  முடியும்.

இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

click me!