வந்தது ஒரே ஒரு போன் கால்! அவசர அவசரமாக "மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற 66 வயது மூதாட்டி!

By ezhil mozhiFirst Published Apr 2, 2020, 11:40 AM IST
Highlights

ஹெர்மன் சுடில் என்பவர் தான் தனது முகநூல் பக்கத்தில் தனது 66 வயதான தாயாரின் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு-ந்து சிங்கப்பூருக்கு நடை பயணமாக சென்றதை பதிவிட்டு உள்ளார். 

வந்தது ஒரே ஒரு போன் கால்! அவசர அவசரமாக "மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற 66 வயது மூதாட்டி!

உங்க கணவருக்கு உடம்பு சரியில்லை என ஒரே ஒரு போன் கால் தான் வந்துள்ளது. உடனே கணவரை காண 66 வயதான மனைவி மேலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது 

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசிய அரசாங்கம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை முழு அளவிலான ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எந்த போக்குவரத்தும் இல்லாததால் அவசரத்திற்கு நடந்தே சென்று உள்ளார் இந்த பெண்மணி 

ஹெர்மன் சுடில் என்பவர் தான் தனது முகநூல் பக்கத்தில் தனது 66 வயதான தாயாரின் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு-ந்து சிங்கப்பூருக்கு நடை பயணமாக சென்றதை பதிவிட்டு உள்ளார். அதில் தன் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வந்து இருந்தார் என் அம்மா. மனைவிக்கு சிசேரியன் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 வார காலமாக எங்களுக்கு உதவ வந்திருந்தார். அவருக்கு கால் வலி வேறு  உள்ளது. இந்த நிலையில் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தது. அவர்  இங்கிருந்து  சிங்கப்பூருக்கு நடந்தே சென்றார் என்பதனை குறிப்பிட்டு உள்ளார்   

அவருக்குத் துணையாக ஹெர்மனின் 20 வயதான உறவினர் பெண் ஒருவரும் கூடவே சென்றுள்ளார். தனது கால் மற்றும் மூட்டு பிரச்சனைகளுடன் நடந்தே செல்வதால் வீடியோ கால் மூலம் அடிக்கடி தகவல்களை பெற்றுள்ளார்.

அதன் படி சரியாக மாலை 5 மணிக்கு மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு பகுதியிலிருந்து கிளம்பிய சேர்மனின் தாயார் இரவு 9:30 மணிக்கு சிங்கப்பூரின் Boon Lay பகுதியை அடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் ஒரு சிலர் இவருக்கு உள்ளனர். பின்னர் ஒரு வழியாக  வீடு சென்றடைந்த அவருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என நோடீஸ் அனுப்ப பட்டு உள்ளது 

click me!