தடுமாறும் "அமெரிக்கா"...! ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 02, 2020, 10:52 AM IST
தடுமாறும் "அமெரிக்கா"...!  ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..!

சுருக்கம்

கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தடுமாறும் "அமெரிக்கா"...!  ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தது பெரும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படிகொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 5,116 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதால் இதுவரை 215,417 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கொரோனா பாதித்த நாடுகளில் ஏற்பட்ட இறப்பு விகிததாய் விட அமெரிக்காவில் அதிக இறப்பு விகிதம் ஏற்பட்டு உள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. தொடர்ந்து நோய் தோற்று அதிகரித்து வருவதும், இறப்பு விகிதமும்  அதிகரிப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது அமெரிக்கா 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்