சென்னையை ஆட்டிப்படைக்கும் "கொரோனா"..! இன்று ஒரே நாளில் 66 பேருக்கு நோய்த்தொற்று..!

By ezhil mozhi  |  First Published Apr 25, 2020, 6:44 PM IST

மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த  நிலையில் 5 நாகராட்சிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. 


சென்னையை ஆட்டிப்படைக்கும் "கொரோனா"..! இன்று ஒரே நாளில் 66 பேருக்கு நோய்த்தொற்று..! 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு புதியதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மட்டும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1821ஆக உயர்ந்து உள்ளது. அதில் ஆண்கள் 38 பேர்  பெண்கள் 28 பேர் என்பது குறிப்பிடத்தக்கது 

Latest Videos

நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 புதிய நோய்த்தொற்றாவது உறுதியாகி வருகிறது.

மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 5 நாகராட்சிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. அதன் படி, சென்னை மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில், இன்று மற்றும் மட்டும்  தமிழகத்தில் 66 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. அதில் மிகவும் கவனிக்க பட விஷயம் என்னவென்றால் சென்னையில் மட்டும் 43 பேர், காஞ்சிபுரம் -7, தென்காசி- 5, மதுரை-4, பெரம்பலூர் -2, விருதுநகர்-2, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 960 பேர் வரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர் . இன்று ஒரே நாளில் 94 பேர் குணமடைந்து டிஸ்சார்க் ஆகி உள்ளனர். அதில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!