ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அவரவர் தம் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அனல் காற்று குறைந்து சில்லென்ற காற்று வீசுவதால் ஒரே என்ஜாய் செய்து வருகின்றனர் மக்கள்
காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை..! 2 மணி நேரத்திற்கும் மேலாக "ஜோ"ன்னுக்கு மழை..!
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன் படி தர்மபுரி, கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், சேலம், திருச்சி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெயில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் ஒரு மணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஒரகடம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீ பெரம்பத்தூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதலே 102 டிகிரி பாரன்நெட்டுக்கும் அதிகமான வெப்ப நிலை நிலவி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக திடீரென பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளை ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அவரவர் தம் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அனல் காற்று குறைந்து சில்லென்ற காற்று வீசுவதால் ஒரே என்ஜாய் செய்து வருகின்றனர் மக்கள்
மேலும் வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான சாரல் மழை பெய்துள்ளது