50% கட்டண சலுகையை அறிவித்து மெட்ரோ நிர்வாகம் அதிரடி..! ரயில் பயணிகளுக்கு குஷியோ குஷி..!

Published : Oct 24, 2019, 06:34 PM IST
50% கட்டண சலுகையை அறிவித்து மெட்ரோ நிர்வாகம் அதிரடி..! ரயில் பயணிகளுக்கு குஷியோ  குஷி..!

சுருக்கம்

வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று  தீபாவளி வருவதால் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் பெரும்பாலானோர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

50% கட்டண சலுகையை அறிவித்து மெட்ரோ நிர்வாகம் அதிரடி..! ரயில் பயணிகளுக்கு குஷியோ குஷி..! 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்களுக்கு 50 % கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று  தீபாவளி வருவதால் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் பெரும்பாலானோர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக 26 ஆம் தேதி சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. காரணம் இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதாவது விடுமுறை நாளில் வருவதால் தீபாவளிக்கென தனி விடுமுறை இல்லாமல் இருப்பது போன்ற தோற்றம் உருவானது.

இந்த நிலையில் மேலும் ஒரு நாள் விடுமுறை இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். பின்னர் 28ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. அதன் படி 26, 27, 28 இந்த மூன்று நாட்களும் தீபாவளிக்கான விடுமுறை நாட்களாக உள்ளது

இப்படி ஒரு தருணத்தில் இந்த 3 நாட்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரியும் நபர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ட்ரெயின், பேருந்து, ஃபிளைட் என பயணம் செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்து உள்ளனர். சொல்லப்போனால் தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னையை பொறுத்தவரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இல்லாமல் காலியாக இருக்கக்கூடிய ஒரு தோற்றம் கண்டிப்பாக இருக்கும். காரணம்.... அனைவரும் அவரவர் ஊருக்கு செல்வதே ...

இப்படி ஒரு தருணத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் தீபாவளியை முன்னிட்டு 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 50% கட்டண சலுகை வழங்க உள்ளது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் இந்த ஒரு தருணத்தில் இந்த கட்டண சலுகை மக்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இல்லை என்றாலும் அன்றைய தினத்தில் ஃபன் மால், கடற்கரை, சினிமா உள்ளிட்ட விஷயங்களுக்கு வெளியே செல்வதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள கட்டண சலுகை பயன்படலாம் என கருதலாம் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து