பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் விலகி ஓட இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!! 

Published : Aug 28, 2024, 09:47 AM ISTUpdated : Aug 28, 2024, 09:54 AM IST
பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் விலகி ஓட இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!! 

சுருக்கம்

Parent - Child Relationship : பெற்றோருடன் சுமுகமான  உறவை ஏற்படுத்த செய்யவேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.  

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் குழந்தை உறவு வெவ்வேறு மாதிரி இருக்கும்.  குழந்தைகள் பெற்றோருடன் கொண்டுள்ள உறவு தான் அவர்களின் ஆளுமையில் பெரிய பங்கு வகிக்கும். ஒருவேளை உங்களுடைய பெற்றோருக்கும் உங்களுக்கும் இடையே நிலையான உறவு இல்லையென்றால் அது ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அப்படி யோசித்திருந்தால் அதற்கான விடையை கண்டுபிடித்தீர்களா? இந்த பதிவில் அதற்கான 5 காரணங்களை காணலாம். 
 
நேர்மையான உரையாடல்:

நல்ல உறவுக்கு அடித்தளமே வெளிப்படையான உரையாடல் தான். எல்லா உறவுக்கும் தகவல் தொடர்பு மிகவும் அவசியம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் உறவுகள் நிலைத்தன்மை அடையும். வெளிப்படையான திறந்த தகவல் பரிமாற்றம்  இல்லாததால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடைவெளி உண்டாகும். உதாரணமாக, இன்றைய நாளில் நீங்கள் எந்த தோழர்/ தோழியுடன் வெளியே செல்கிறீர்கள் என்பது குறித்த நேர்மையான உரையாடல் தான் பெற்றோர்கள் தவறானதை நினைப்பதை தடுக்கும். இது அவர்களை கவலையில்லாமல் வைத்திருக்கும். இதனால் நீங்கள் திரைப்படம் பார்க்கும்போது 100 அழைப்புகள் பெற்றோரிடம் வருவதை தடுக்கலாம். 

இதையும் படிங்க:  அதிகமாக கோபப்படும் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சமாளிக்க பெற்றோர் இதை ஃபாலோ பண்ணுங்க.. நச்னு 5 டிப்ஸ்!!

எதிர்பார்ப்புகள் பலவிதம்: 

எல்லா பெற்றோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பெற்றோருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தங்கள் குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். இந்த இடத்தில் தான் பெற்றோர் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்து கொள்கிறார்கள்.  பெற்றோரின் அழுத்தம் குழந்தையை புதிய முயற்சிகளில் ஈடுபட விடாமல் திசை திருப்பலாம். கடிவாளம் கட்டிய குதிரை போல உணர்வார்கள். எப்போதும் தாங்கள் கண்காணிப்படுவதாக அவர்களுக்கு தோன்றும். பெற்றோர் தாங்கள் விரும்பும் வாழ்க்கையை பிள்ளைகள் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து விலக நினைப்பார்கள். இதற்கு பதிலாக குழந்தைகள் பெற்றோரிடமிருந்து அறிவுரைகளை பெற்று தங்கள் சொந்த விருப்பத்தினை நிறைவேற்றும் பாதையை கண்டுபிடிக்க சுதந்திரம் அளித்தால் அவர்கள் நிச்சயம் மகிழ்வார்கள். இதை பெற்றோர் செய்ய தவறினால் குழந்தைக்கும் உங்களுக்கும் நடுவே தொடர்ந்து சண்டைகள் வரலாம்.  

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைக்கு எப்போது ஆயில் மசாஜ் செய்ய ஸ்டார்ட் பண்ணலாம்?!

கடந்தகால பிரச்சனைகள்: 

எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படி பேசி தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால் அது நம்மை நிம்மதியாக இருக்கவிடாது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது மனக்கசப்பை உண்டாக்கும். உடைகளை தேர்வு செய்தல், உயர்கல்வியில் பாடங்களை தேர்வு செய்தல், யாருடன் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நடுவே வாக்குவாதம் வரலாம்.  இது போன்ற பிரச்சனைகள் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கும்.  இந்த பிரச்சனைகளை தீர்க்க குழந்தைகளும் பெற்றோரும் முன்வராவிட்டால் உங்கள் உறவு பாதிக்கும்.  

உணர்வுகள் முக்கியம்: 

இளமை பருவம் குழப்பங்கள் நிறைந்தது. அந்த சமயத்தில்  பெற்றோர் அவர்களுக்கு அவசியம் தேவை. அப்போது பெற்றோரிடம் அந்த ஆதுரமான வார்த்தையோ, அரவணைப்போ இல்லையென்றால் அதை பிறரிடம் தேட தொடங்குவார்கள். இதனால் பின்னாளில் குழந்தை பெற்றோரிடம் இருந்து உணர்ச்சி ரீதியில் விலகி இருக்கலாம். பெற்றோர் தங்களின் வேலையில் அழுத்தம், மனதளவில் சோர்வு உள்ளிட்ட பல காரணங்களால்  குழந்தையை அடிக்கடி கவனிக்காமல் விடலாம். ஆனால் வாழ்க்கையில் தேவையான தருணங்களில் அன்பும் அக்கறையும்  கிடைக்காமல் புறக்கணிப்பு, தவறான புரிதல்கள் போன்றவை ஏற்பட்டு பெற்றோருடனான உறவில் விரிசல் உண்டாகும். 

தலைமுறை இடைவெளி 

ஒவ்வொரு தலைமுறையினரும் காலத்தின் போக்குக்கு ஏற்படி தான் இருப்பார்கள். உதாரணமாக 90களில் பிறந்தவர்கள் டிவியை அதிகம் பார்த்து வளர்ந்திருப்பார்கள். இன்றைய தலைமுறைக்கு இணையம், செல்போன் தாராளமாக கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு மாறுபட்ட மதிப்புகள் இருக்கும். அவர்களின் நம்பிக்கை, சிந்தனை எல்லாமே வேறாக இருப்பதால், பெற்றோர், குழந்தைகளிடையே விவாதங்கள் வரும். பாரம்பரியங்களை சார்ந்திருக்கும் பெற்றோர், நவீன அணுகுமுறையைக் கொண்ட குழந்தைகள் நீண்ட நேரம் உரையாடுவது கடினம்.  இதனை பேசி தீர்க்கப்படாவிட்டால், இதனால் கருத்து வேறுபாடுகளும்,  தவறான புரிதலும் வரும். அதனால் கூடுமானவரை அவரவர் கருத்துகளை வெளிபடையாக பேசி அதனை புரிந்து கொள்ள முயலுங்கள். 

இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டால் பெற்றோர் குழந்தை உறவு மேம்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்