KK death Heart attack: இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்..? நிபுணர்களின் பொதுவான 5 காரணங்கள்...

By Anu KanFirst Published Jun 1, 2022, 12:50 PM IST
Highlights

Singer KK death Heart attack: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. இதற்கு மருத்துவர்கள் கூறும் பொதுவான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. இதற்கு மருத்துவர்கள் கூறும் பொதுவான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரபல பாடகர் 53 வயதில் மாரடைப்பால் மரணம்:

பிரபல பாடகரான கேகே (53), தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில்  ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார்.கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என கூறப்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமார்:

இது முதல் தடவை அல்ல முன்னதாக, கன்னட சினிமா உலகின் உச்சபட்ச ஸ்டார்களில் ஒருவர் புனித் ராஜ்குமார், தனது 46 வயதில் கடந்த 2021 ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம் வயதிலேயே மாரடைப்பு ?

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது.வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர். உடற் பயிற்ச்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறானது. விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பால் இறந்து வருவதை செய்திகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். 

ஆரோக்கியமானவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதைக்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன? என்பது தான்  பெரும்பாலோனோர் கேள்வியாக பலருக்கும் இருக்கிறது.இதற்கு மருத்துவர்கள் கூறும் பொதுவான காரணங்கள் பற்றி தெரிந்து வைத்து .

இதய நோய்க்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் புகைப்பழக்கம், உடல்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாடின்றி இருத்தல் ஆகியவையும், இவற்றுடன் கூடிய மன அழுத்தமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். மேலும்,  இரவு தூக்கத்தை தவிர்த்தல், உடல் புத்துணர்வு பெறுவதற்கு தேவையான நேரத்தை வழங்காமை ஆகியவற்றை ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் இதய நோய்களைப் பொறுத்தவரை முறையான வாழ்வியல் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பெருமளவில் தடுத்துவிட முடியும் என்கிறார்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான 4 அறிகுறிகள்:

1. நெஞ்சு வலி இதய நோயின் பொதுவான அறிகுறியாகும். மார்பு வலி, இறுக்கம் மற்றும் அழுத்தம் போன்ற உணர்வு மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனால் நெஞ்சு வலி இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

2. உடல் சோர்வு, அஜீரணம், வயிற்று வலி போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் இதயம் நோயுற்றால், நீங்கள் சோர்வாக உணர ஆரம்பிக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், வயிற்று வலி ஏற்படலாம். மேலும், உடலின் இடது பக்கத்தில் வலி இருப்பதும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். 

3. இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

4. தொண்டை அல்லது தாடை வலி கூட மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும்.  இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும். 

மேலும் படிக்க....dogs: நாய் ஏன் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கிறது? சமீபத்திய ஆய்வில் வெளிவந்த உண்மைகள்..

 
  
 

click me!