உஷார் மக்களே..! குலுங்குது காஞ்சிபுரம்..! அத்தி வரதரை காண இப்போதே 5 லட்சம் மக்கள்...!

By ezhil mozhiFirst Published Aug 15, 2019, 1:36 PM IST
Highlights

இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் விடுமுறை நாளை காரணமாக வைத்து பல லட்சம் மக்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் விடுமுறை நாளை காரணமாக வைத்து பல லட்சம் மக்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இன்று ஒரே நாளில் மணி ஒரு மணி அளவில் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் முடித்து விட்டனர். தற்போது மீதம் 3 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது கருடசேவை நடைபெற இருப்பதால் சில மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை தரிசனத்திற்கு மக்களை அனுமதிக்கப்படுவார்கள். அதுவரையிலும் மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தேவையான அன்னதானம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை ஒரே ஒரு நாள் மட்டுமே பொது தரிசனத்திற்கு மக்களை அனுமதிக்க படுவார்கள். அதன் பின்னர் நாளை மறுதினம் முக்கிய அரசு அதிகாரிகள், அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமிர்தசரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளது

click me!