
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண வந்த பக்தர் ஒருவருக்கு நேற்று தரிசனம் முடிந்த உடன் அங்கேயே குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு அத்திவரதர் என பெயரிட்டு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர் பெற்றோர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாணர்வரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் அசோக்குமார் மற்றும் கர்ப்பிணியான விமலா. இவர்கள் இருவரும் நேற்று அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை புரிந்தனர். அப்போது தரிசனம் முடிந்து வெளியே வந்த போது ஏற்பட்ட பிரசவ வலியால் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த தருணத்தில் டாக்டர் ஜான்சிராணி மற்றும் செவிலியர்கள் வள்ளி விமலாவிற்கு பிரசவம் பார்த்தனர். அப்போது 3 கிலோ எடையில் ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது. பின்னர் அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அத்திவரதர் கோவிலுக்கு வரும் போது குழந்தை பிறந்ததால் தங்களுடைய குழந்தைக்கு அத்தி வரதர் என பெயர் சூட்டி மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.