வெள்ளை சக்கரையை விட்டுவிடுங்கள்- உடனடியாக இந்த இனிப்புகளுக்கு மாறுங்கள்..!!

By Dinesh TG  |  First Published Dec 11, 2022, 12:33 PM IST

வெள்ளை சக்கரைக்கு மாற்றான பொருளை பலரும் தேடுகின்றனர். அந்த வகையில் சக்கரைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய 5 பொருட்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த உணவு அல்லது பானத்தில் இனிப்பைச் சேர்க்க விரும்பினால், அது என்னமாதிரியான இனிப்பு என்பதை கவனமாக தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிலுள்ள பெரும்பாலானவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சக்கரையை தான் உட்கொள்கின்றனர். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதிக சர்க்கரை உள்ள உணவுகள் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் வெள்ளை சக்கரைக்கு மாற்றான பொருளை பலரும் தேடுகின்றனர். அந்த வகையில் சக்கரைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய 5 பொருட்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

தென்னங்கருப்பட்டி

Latest Videos

தேங்காய் மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னங்கருப்பட்டியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. அதனுடைய மகத்துவம் தெரியாததால் பலரும், அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தேங்காய் சர்க்கரை என்பது தேங்காய் சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிய அளவு தாதுக்கள், ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. வழக்கமான சர்க்கரையை விடவும் தேங்காய் சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சற்று குறைக்கிறது. இதில் ஃப்ரூக்டோஸ் அதிகமாக இருப்பதால், பருமனானவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பனங்கருப்பட்டி

சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக முன்னிறுத்தப்படுவதில் பனங்கருப்பட்டிக்கு முக்கிய இடம் உள்ளது. இதனுடைய அதன் உற்பத்தியில் எந்த இரசாயனங்களும் சேர்க்கப்படாது மற்றும் இதனுடைய உற்பத்தி பணிகளும் குறைந்த செயலாக்கம் கொண்டது தான். இது சுத்திகரிக்கப்படாததால் உடல் ஆரோக்கியத்துக்கு பெருமளவு பயனளிக்கிறது. அதிக அளவு தாவர அடிப்படையிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பனங்கருப்பட்டியில் உள்ளன. ஒப்பிடக்கூடிய இனிப்புகளை விட பனங்கருப்பட்டியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளன. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் இருதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பேரீச்சைப் பழ சக்கரை

மத்திய கிழக்கு நாடுகளில் பேரீச்சைப் பழத்தை வைத்து சக்கரை தயாரிக்கப்படுகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட சக்கரைக்கு மாற்றாக பலரால் முன்னிறுத்தப்படுகிறது. இது நேரடியாக பேரீச்சைப் பழத்தில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சக்கரைக்கு வந்து சேர்க்கின்றன. அதன்படி இதில் நார்ச்சத்து உள்ளது, செரிமானத்துக்கு உதவுகின்றன, ரத்த சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் நீடித்த ஆற்றலை நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றல் பேரீச்சைப் பழ சக்கரையில் இடம்பெற்றுள்ளது.

பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!

மிஷ்ரி சக்கரை

இது பார்க்க கற்கண்டு போல இருக்கும், ஆனால் இதை ’ராக் சுகர்’ என்று குறிப்பிடப்படுகிறது. சர்க்கரையின் ஒரு சிறிய படிக வடிவமாகும். நாட்டின் பிற பகுதிகளில் இதை புரா சக்கரை அல்லது காந்த் என்று அழைப்படுகிறது. இகரும்புச் சாற்றை ஆவியாக்கிய பிறகு இந்த மிஷ்ரி தயாரிக்கப்படுகிறது. இதை மிளகுடன் சேர்த்து சாப்பிடும் போது இருமல், ஜலதோஷம், மூக்கில் தண்ணி வடிவது போன்ற பிரச்னைகள் நீங்குகின்றன. ஒரு நல்ல விருந்துக்கு பிறகு மிஷ்ரி சாப்பிட்டால், செரிமானம் எளிய முறையில் நடக்கும். அதேபோன்று, மிஷ்ரி நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வை நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலுடன் மிஷ்ரியை சேர்த்து குடித்தால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

ஸ்டீவியா

ஸ்டீவியா என்பது ஸ்டீவியா தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படக்கூடிய ஒரு சக்கரை. இது ஜீரோ கலோரிகளை கொண்டிருப்பதோடு, டேபிள் சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பாக இருக்கும். அதனால் எடையைக் குறைக்க விரும்புவோர் பலருகும் ஸ்டீவியா சக்கரையை விரும்பி உண்கின்றனர். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சக்கரை அளவை சரியான முறையில் நிர்வகிக்க ஸ்டீவியா சக்கரை பெரிதும் உதவுகிறது என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஸ்டீவியா, சர்க்கரையின் கூடுதல் நுகர்வு குறைக்க உதவும், இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

click me!