ஆதரவற்ற 4 சிறுவர்கள் சாதனை..! லண்டனில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு..!திறமைக்கு குவியும் அங்கீகாரத்தால் குவியும் பாராட்டு..!

By ezhil mozhiFirst Published Apr 12, 2019, 3:04 PM IST
Highlights

கிரிக்கெட் என்றாலே உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியக்கூடிய ஒரு பிரபலமான விளையாட்டு. 

கிரிக்கெட் என்றாலே உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியக்கூடிய ஒரு பிரபலமான விளையாட்டு. இந்த கிரிக்கெட் விளையாட்டிலும் தெரு கிரிக்கெட் உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து நான்கு சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரு கிரிக்கெட்டை பொறுத்தவரை தங்கள் வசதிக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றி மாற்றி அமைத்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளையாடுவதைப் பார்க்க முடியும் .அந்த வகையில் லண்டனில் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு சென்னையில் இருந்து நான்கு சிறுவர்கள் தேர்வாகி உள்ளனர் என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

இவர்கள் நான்கு பேரும் கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையிலிருந்து நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொண்டு 8 பேர் ஒரே அணியாக லண்டன் புறப்பட உள்ளனர். தெரு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளில் இந்தியா இங்கிலாந்து பாகிஸ்தான் நேபாள் பங்களாதேஷ் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 10 அணிகள் விளையாட உள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் வட இந்தியா தென்னிந்தியா என இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னையிலிருந்து தேர்வான இந்த நான்கு பேரும் பெற்றோர்களை இழந்து ஏழ்மையுடன் கருணாலயா மையத்தில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு மக்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

click me!