
4 நாள் பச்சிளம்குழந்தையை 20,000 ரூபாய்க்கு விற்ற கொடூரம்.....!!!
பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 20,000 ரூபாய்க்கு விற்க முயன்ற கொடூரம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் வசிக்கும் கிருஷ்ணா என்பவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தினக்கூலி பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில்,இவரது மனைவி சுஜாதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார்.
இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சுஜாதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் எப்படி மூன்று குழந்தைகளையும் வளர்ப்பது என யோசித்து, 20, 000 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குழந்தையை வாங்க வந்த மர்ம நபர்கள் இருந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த இடத்திலிருந்து அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.