பிரபல தொலைகாட்சி நிறுவன ஒளிபரப்புக்கு ,  24 மணிநேரம் தடை...!!! இந்தியாவில்  முதல் முறை ...!!!

 
Published : Nov 05, 2016, 05:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
பிரபல தொலைகாட்சி நிறுவன ஒளிபரப்புக்கு ,  24 மணிநேரம் தடை...!!! இந்தியாவில்  முதல் முறை ...!!!

சுருக்கம்

பிரபல தொலைகாட்சி நிறுவன ஒளிபரப்புக்கு ,  24 மணிநேரம் தடை...!!! இந்தியாவில்  முதல் முறை ...!!!

கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் நடைபெற்ற இந்த தாக்குதல் பற்றி, பொறுப்பற்ற வகையில், சில அதிமுக்கியமான தகவல்களை என்டிடிவி இந்தியா நிறுவனத்தின் இந்தி  மொழி டிவி சேனல் ஒளிபரப்பு செய்தது.

இந்த ஒளிபரப்பின் போது, அதிமுக்கியமான தகவல்களை  ஒளிபரப்பியதால் தான் ,  தீவிரவாதிகளுக்குக் கூடுதல் தகவல்களை காட்டிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலின்போது, என்டிடிவி இந்தியா இதேபோன்று செயல்பட்டதாலேயே, அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக  குற்றசாட்டு  எழுந்தது.

இந்நிலையில், பதான்கோட் செய்தி வெளியீடு பற்றி, மத்திய அரசு  விசாரணை  மேற்கொண்டு  வருகிறது. இதன் தொடர்ச்சியாக , இந்த  குற்றசாட்டு  நிரூபிக்கபட்டால், நவம்பர்  9 ஆம் தேதியன்று என்டிடிவி இந்தியா டிவி சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட வேண்டும்  என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின்  பாதுகாப்பு  கருதி,  இந்திய அளவில்  செய்தியை  மக்களுக்கு  தெரிவிக்கும் ஒரு தொலைகாட்சியை  முடக்கப்படுவது இதுவே  முதல் முறை  என்பதும், இந்த  தகவல் அனைவரிடமும்  ஒரு  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது   என்பதும்  குறிப்பிடத்தக்கது.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kitchen Tips : மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்த வாசனை போகலயா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்!
Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க