செப்டிக் டேங்கில் விழுந்து மேலும் ஒரு குழந்தை பலி .! பெற்றவர்கள் எங்கு சென்றனர் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Oct 30, 2019, 6:52 PM IST
Highlights

விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் கிராமத்தில் வசித்து வந்த மகாராஜா- பிரியா தம்பதியினருக்கு இரண்டரை வயதில் பவளவள்ளி என்ற குழந்தை இருக்கிறாள். பிரியாவின் தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

செப்டிக் டேங்கில் விழுந்து மேலும் ஒரு குழந்தை பலி .! பெற்றவர்கள் எங்கு சென்றனர் தெரியுமா..? 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் இறப்பிற்கு பின் மேலும் சில துயர சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் கிராமத்தில் வசித்து வந்த மகாராஜா- பிரியா தம்பதியினருக்கு இரண்டரை வயதில் பவளவள்ளி என்ற குழந்தை இருக்கிறாள். பிரியாவின் தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மகாராஜா பிரியா இவர்களிருவரும் தங்களது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு பார்த்துக்கொள்ளுமாறு கூறி  கடலூர் அரசு மருத்துவமனைக்கு தன் தந்தையை பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த வீட்டில் புதிதாக தோண்டப்பட்டு இருந்த செப்டிக் டேங்க் குழியில் தவறுதலாக குழந்தை விழுந்து மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. பின்னர் குழந்தை காணவில்லை என அங்குமிங்குமாக தேடி உள்ளனர்.  

பின்னர் உடனடியாக மகாராஜா மற்றும் பிரியாவிற்கு தெரிவிக்கவே விரைந்து வந்த பெற்றோர் குழந்தையை தேடி உள்ளனர். அப்போது அதிர்ச்சி தரும் விதமாக அருகிலிருந்த  செப்டிக் டேங்க் குழியில் குழந்தை இறந்து மிதந்து இருந்துள்ளது. இந்த காட்சியை பார்த்த பெற்றோர்கள் கதிகலங்கி கதறித் துடித்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை எப்படி விழுந்தது? ஏன் சரிவர குழந்தையை பார்த்துக் கொள்ளவில்லை? கவனக்குறைவாக பக்கத்து வீட்டில் விட்டு சென்றது எதற்கு? என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!