12 ராசியினரும் இதை கொஞ்சம் படிங்க...! உங்களுக்கு இன்று இப்படித்தான் இருக்குமாம்..!

Published : Oct 14, 2019, 11:35 AM IST
12 ராசியினரும் இதை கொஞ்சம் படிங்க...! உங்களுக்கு இன்று இப்படித்தான் இருக்குமாம்..!

சுருக்கம்

உங்களுக்கு இதுநாள் வரை இருந்துவந்த கடனில் ஒரு பகுதியை முடித்து வைப்பீர்கள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம். பணவரவு அதிகரிக்கும்.

12 ராசியினரும் இதை கொஞ்சம் படிங்க...! உங்களுக்கு இன்று இப்படித்தான் இருக்குமாம்..! 

மேஷ ராசி நேயர்களே...!

செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று தேவையற்ற அலைச்சல் உண்டாகலாம். சோர்வு அதிகரிக்கும்.
உங்களுடைய பேச்சில் நிதானம் தேவை.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுக்கு இதுநாள் வரை இருந்துவந்த கடனில் ஒரு பகுதியை முடித்து வைப்பீர்கள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம். பணவரவு அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

தொழில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கடகராசி நேயர்களே...!

சவாலான பல விஷயங்களை எளிதாக பேசி முடிப்பீர்கள். மிக முக்கிய நபர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களுடைய வாகனத்தை சரி செய்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வெளியூர் பயணத்தால் திடீரென அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய மதிப்பு வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். ஆனாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்களுடைய லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். வீண் பேச்சை தவிர்ப்பது மிகவும் நல்லது.

துலாம் ராசி நேயர்களே..!

இனம் புரியாத வேதனை வருத்தம் நீங்கி நம்பிக்கை உற்சாகம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிர்த்து நின்றவர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.

விருச்சக ராசி நேயர்களே..!

வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பல முக்கிய நபர்களின் நட்பு அதிகரிக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

இழுபறியாக இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண்பீர்கள். உங்களுடைய செல்வாக்கு வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்களை நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வீட்டு விசேஷத்திற்கு முன்னின்று நடத்துவீர்கள். நிதானமாக செயல்படுவது நல்லது.

கும்பராசி நேயர்களே...!

எத்தனை பிரச்சினை வந்தாலும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். பழைய சம்பவங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமண முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடக்கும்.

மீனராசி நேயர்களே...!

எந்த ஒரு சூழலிலும் பொறுமையை இழக்க கூடாது. உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சு செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். இன்று மாலை முதல் மகிழ்ச்சியாக  காணப்படுவீர்கள். தேவையான பணம் மற்றும் பொருள் வரவு உண்டு.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்