இடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்...! சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..!

By ezhil mozhiFirst Published Oct 12, 2019, 7:52 PM IST
Highlights

பிரபல நடிகர்களும் அவர்களுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இனி எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர் வைக்க கூடாது என தெரிவித்து இருந்தனர்.

இடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்...! சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான  மாற்றம்..! 

சென்னையில் நடைபெற்ற ஓர் கட்சி நிகழ்ச்சியின் போது வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுப ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனைத்தொடர்ந்து தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்தனர். அதே போன்று பிரபல நடிகர்களும் அவர்களுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இனி எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர் வைக்க கூடாது என தெரிவித்து இருந்தனர்.

அதற்கேற்றவாறு தொண்டர்களும் ரசிகர்களும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதி மொழி கொண்டனர். தேவைப்படும் பட்சத்தில் அனுமதிபெற்று பேனர் வைக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கட்சிப் பணிக்காக கட்சி கொடிகள் கட்டுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவது சுவர் விளம்பரங்களை பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் பேனர் வைக்காமல் உள்ளனர்

இதனடிப்படையில் முதல்முறையாக வேலை வைக்காமல் நடைபெறும் இடைத்தேர்தலில் என்றால் அது நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போது வரும் மாற்றம்  என எதிர்பார்த்தவர்களுக்கு சுபஸ்ரீ இழப்பிற்குபின் தான் இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்பதை உறுதி செய்துள்ளது இப்படியான ஒரு நிகழ்வு

click me!