கனமழை எச்சரிக்கை...! 9 மாவட்டங்களில் பேய்மழைக்கு வாய்ப்பு..!

Published : Oct 12, 2019, 06:45 PM IST
கனமழை எச்சரிக்கை...! 9 மாவட்டங்களில் பேய்மழைக்கு வாய்ப்பு..!

சுருக்கம்

குமரி கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கோவை திருப்பூர் நீலகிரி கிருஷ்ணகிரி தருமபுரி ஈரோடு சேலம் தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனமழை எச்சரிக்கை...! 9 மாவட்டங்களில் பேய்மழைக்கு வாய்ப்பு..!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கோவை திருப்பூர் நீலகிரி கிருஷ்ணகிரி தருமபுரி ஈரோடு சேலம் தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நீலகிரி மாவட்டம் குந்தா பாலம் தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நாகப்பட்டினம் கரூர் திருச்சி தேனி திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை சிவகங்கை தூத்துக்குடி விருதுநகர் திருநெல்வேலி கன்னியாகுமரி கோவை நீலகிரி சேலம் திண்டுக்கல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!
Parenting Tips: பெற்றோருக்கு சுமையை ஏற்றி, பிள்ளைகளை பலவீனமாக்கும் 7 வளர்ப்பு நம்பிக்கைகள்: அறிவியல் உண்மை!