1100 பயன்படாதஆழ்துளை கிணறுகள் அதிரடி மூடல்! வெறும் 3 நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர் மகேஸ்வரி...!

By ezhil mozhiFirst Published Oct 29, 2019, 4:54 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும் பயன்படாத 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார் 

1100 பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அதிரடி மூடல்! வெறும் 3 நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர் மகேஸ்வரி...!

சிறுவன் சுர்ஜித் இழப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதிலும் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு சார்பிலும், தன்னார்வலர்களும் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அவரவர் ஊரில் உள்ள பாதுகாப்பற்ற மூடப்படாத ஆழ்துளை கிண்றுகளை தொடர்ந்து மூடி வருகின்றனர். 

அவ்வாறு மூடப்படும் ஆழ்துளை கிணறு குறித்த புகைப்படங்கள் மற்றும் விவரத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும்  பயன்படாத 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார் 

இது தவிர்த்து, மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் பற்றி 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தவிர்த்து அரசு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் ஆழ் துளை கிணறு அமைக்க வேண்டும் என்றால் எழுத்து பூர்வமாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு தான் அமைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். 

click me!