தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்பி கனிமொழி அவருடைய தாய் ராசாத்தி அம்மாள் கலைஞர் கருணாநிதி இவர்கள் மூவரும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது
கலைஞருடன் இருக்கும் இந்த சிறுமி யார்..? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!
காலம் பொன் போன்றது... ஓல்ட் இஸ் கோல்ட் என பல பழமொழிகளை கேட்டு இருப்போம். அதற்கெல்லாம் உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளை சொல்லலாம். அந்த வகையில் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் படியான ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவருடைய மனைவி ராசாத்தி அம்மாள் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்பி கனிமொழி அவருடைய தாய் ராசாத்தி அம்மாள் கலைஞர் கருணாநிதி இவர்கள் மூவரும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது
சமீபகாலமாக காணக்கிடைக்காத புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள், பல அரிய புகைப்படங்கள், பேசும் படங்கள் என பலவகையான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக எளிதாக பார்க்க முடிகிறது. இந்த போட்டோக்களை பார்க்கும்போது இப்போது இருக்கும் கனிமொழி... சிறுவயதில் இப்படி இருந்தாரா? இவ்வளவு அழகாக இருந்தாரா? கலைஞர் கருணாநிதியுடன் கம்பீரமாக போஸ் கொடுத்து நிற்கிறாரே... என்றவாறு எல்லாம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் உங்களுக்காக....