இப்போதே "ஆட்டம்" காண தொடங்கியது! வேலை இழக்கும் 1.5 கோடி பேர் ..! எப்படி? எந்த துறையில் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Apr 11, 2020, 3:23 PM IST
Highlights

சற்று வேகமெடுத்து உள்ள கொரோனா பரவல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவில் இருக்கும் இந்தியா எப்படி பொருளாதார இழப்பை சமாளிக்க போகிறதோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இப்போதே "ஆட்டம்" காண தொடங்கியது!  வேலை இழக்கும் 1.5 கோடி பேர் ..! எப்படி? எந்த துறையில் தெரியுமா..

கரோனா என்ற ஒற்றை வைரசால் தற்போது உலகமே முடங்கிக் கிடக்கும் ஒரு சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்தந்த நாட்டு அரசாங்கம் பெரும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், கட்டுக்குள் அடங்காத கொரோனாவால் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். பல்வேறு நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும்.

இந்த ஒரு நிலையில் சற்று வேகமெடுத்து உள்ள கொரோனா பரவல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவில் இருக்கும் இந்தியா எப்படி பொருளாதார இழப்பை சமாளிக்க போகிறதோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு போலவே தொழில் துறையிலும் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்து, ஏற்றுமதி துறையில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ள விவரத்தின் படி,"ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் 50 சதவீதத்திற்கும் மேலான ஆர்டர்கள் ரத்தாகி விட்டது. ஏற்றுமதி துறையின் எதிர்காலம் தற்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் இதனால் பொருளாதார மேலும் பல மடங்கு பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ஏற்றுமதி தொழிலில் பேரழிவு ஏற்படும் என்பதால், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறைந்த பட்ச தொழிலாளர்களுடன் ஏற்றுமதி தொடர்பான உற்பத்திக்கு உடனடியாக மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதே நிலை நீடித்தால் பொருளாதார பாதிப்பு மட்டுமல்லாமல் சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பொருளாதார பாதிப்பால் ஏற்றுமதி துறையில் மட்டும் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டால் மற்ற துறைகளிலும் இதுபோன்ற பாதிப்பு பிரதிபலிக்கும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக பல கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் விரைந்து பல்வேறு நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மத்தியிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இது ஒரு பக்கம் இப்படியிருக்க, நினைத்ததை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மத்திய மாநில அரசுகள். "மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே போதும்... கொரோனா பரவாமல் தடுக்க முடியும்" என்றும் தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது என்றும் மூன்றாம் கட்டம் செல்லாமல் இருப்பதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதனை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே காவலர்களுக்கும்  மருத்துவர்களுக்கும் 50 சதவீதத்திற்கும் மேல் வேலை மிச்சமாகும் என நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நிலையில் மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சொல்லப்போனால் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை செய்ததில் இன்னும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு நிலையில் பொருளாதார பாதிப்பை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!